Kathir News
Begin typing your search above and press return to search.

டெல்லி கலவரம் : "உன்னைக் கற்பழித்து நான்கு துண்டுகளாக வெட்டி விடுவேன்" இளம்பெண்ணை மிரட்டிய சமீர் அஹ்மத்.!

கோர்ட்டுக்கும் காவல் நிலையத்திற்கும் அலையாய் அலைந்தாலும் அவர் கொடுத்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

டெல்லி கலவரம் : உன்னைக் கற்பழித்து நான்கு துண்டுகளாக வெட்டி விடுவேன் இளம்பெண்ணை மிரட்டிய சமீர் அஹ்மத்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  4 Aug 2020 2:09 AM GMT

புதுடெல்லியில் உள்ள மொஹான்பூரி ஏரியாவில் ஹிந்து குடும்பங்கள் 2, 3 சந்துகளில் முஸ்லிம்களால் சூழப்பட்டு வசித்து வருகின்றனர். இந்த வருடம் பிப்ரவரி 21ஆம் தேதி டெல்லி கலவரங்கள் நிகழ்வதற்கு சில நாட்களுக்கு முன்பு தன் நாயை அழைத்துக் கொண்டு நடைபயில சென்ற ஒரு ஹிந்து சிறுமியை (இளம் பெண்), அதே பகுதியில் வசித்து வரும் சமீர் அஹ்மத் கடுமையாக திட்ட ஆரம்பித்ததாகவும், அந்த சிறுமி அவனை நிறுத்தச் சொல்லிக் கேட்டபோது இந்த நாயை எங்களின் ஏரியாவிற்கு யூரின் போக கூட்டி வரவேண்டாம் என்றும் அல்லது நான் உன்னை கற்பழித்து நான்கு துண்டுகளாக வெட்டி விடுவேன் என்று மிரட்டியதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.



இதற்கு கோபமுற்ற அந்த சிறுமி அந்த பையனின் சட்டை காலரை பிடித்தார். வீட்டிற்கு வந்த பிறகு காவல் நிலையத்திற்கு போன் செய்து பதிவு செய்தவுடன் பிறகு காவல் நிலையத்திற்கு சென்றனர். அங்கு அவரையும் அவர் அன்னையையும் 3 மணி நேரங்கள் காக்க வைத்ததோடு மட்டுமல்லாமல் அந்த பையன் காவல் நிலையத்திற்கு வந்த போது அவரது உறவினர்கள் என 50 முஸ்லீம்களும் சேர்ந்து கும்பலாக வந்தனர்.

காவல் நிலையத்திலேயே, தான் திட்டியதையும் கற்பழித்ததாக மிரட்டியதும் ஒத்துக்கொண்ட அந்த பையன் அதை சிரித்துக்கொண்டே கூறினான் என்று அந்த சிறுமி கூறுகிறார். FIR பதிவு செய்ய வேண்டாம் என்று அந்த இந்து பெண்ணை சமாதானம் பேச முயற்சித்தனர். அவர் ஒத்துக் கொள்ளும் வேளையில் சட்டை காலரை பிடித்ததாக இவர் மீது FIR போடப்படும் என்று மிரட்டப்பட்டார்.

செல்வாக்கு மிகுந்த ஒரு முஸ்லிம் பெரியவர் அந்த பையனின் ஆதரவாக போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தவுடன் தான் இத்தகைய மாறுதல்கள் நிகழ்ந்ததாக அந்த சிறுமி குற்றம் சாட்டுகிறார். இதற்கு சில நாட்களுக்குப் பிறகு டெல்லி கலவரம் ஆரம்பித்தது. கலவரம் நடந்து முடிந்த பத்து பதினைந்து நாட்களில் அந்த பகுதியில் வாழும் இந்துக்கள் பயத்தில் உறைய ஆரம்பித்தனர். எந்த அளவுக்கு பயம் என்றால் தங்கள் வீடுகளை விற்று விட்டு வேறு ஏரியாவுக்கு குடி புகும் அளவிற்கு, அச்சத்தில் வாழ தொடங்கினர்.

அதன் பிறகும் கோர்ட்டுக்கும் காவல் நிலையத்திற்கும் ஹிந்து சிறுமி அலையாய் அலைந்தாலும் அவர் கொடுத்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் இதனால் தைரியம் அடைந்த சமீர் இப்போது இரண்டு வாரங்களுக்கு முன்பு மீண்டும் அந்த பெண்ணை வந்து மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

"போலீஸ் என்ன செய்தது? நான் என்ன சொன்னேனோ அதை செய்து காட்டுவேன். போலீஸ் என்னுடைய பாக்கெட்டில் இருக்கிறது" என்றும் அந்த பையன் மீண்டும் மிரட்டுவதாக கூறப்படுகிறது. தன்னை மிரட்டிய அவனுக்கு எதிராக நடவடிக்கை எதிர்பார்க்கிறார் அந்த சிறுமி.

"நாங்கள் ஒரே பள்ளியில் படித்தவர்கள். சின்ன வயதிலிருந்து இருவருக்கும் தெரியும் என்றாலும் அவன் என்னை மிரட்டுகிறான். நாளைக்கு மிரட்டியதை செய்து காட்ட மாட்டார் என்பது என்ன நிச்சயம்? எனவே எனக்கு நீதி வேண்டும். ஒரு முஸ்லிம் கும்பலுக்கு பயந்து எனக்கு ஆதரவளிக்காமல் அந்த பையனுக்கு ஆதரவு அளித்த அத்தனை பேர் மீதும் நடவடிக்கை வேண்டும்" என்று கூறுகிறார்.

Next Story