Kathir News
Begin typing your search above and press return to search.

மன அழுத்தத்தால் என்னை இழந்திருப்பேன் - அமலா பால்!

மன அழுத்தத்தால் என்னை இழந்திருப்பேன் - அமலா பால்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  3 April 2020 6:51 AM GMT

கடந்த பிப்ரவரி மாதம் அமலா பாலின் தந்தை மரணமடைந்தார். அந்த செய்தி மட்டும் வெளிவந்த நிலையில், தற்போது அது குறித்து சமூக வலைதளத்தில் மவுனத்தை கலைத்துள்ளார் அமலா பால்.

அதில் "பொற்றோரின் இழப்பினால் ஏற்படும் உணர்வை வார்த்தைகளால் விளக்கிவிட முடியாது. அது ஒரு மிகப்பெரிய இழப்பு. அதன்பிறகு நாம் இனம்புரியாத ஒரு இருட்டுக்குள் நுழைந்துவிடுகிறோம். பலவிதமான உணர்வுகள் நமக்கு ஏற்படுகின்றன. புற்றுநோயால் எனது தந்தை இறந்த பிறகு எனது வாழ்வில் புதிய விஷயங்கள் வந்தன. அது எனக்கு பல விஷயங்களை உணர்த்தின. அதில் ஒரு முக்கியமான விஷயம். நாம் ஒரு அழகான பெரிய உலகில் வாழ்கிறோம். அதில் நிறைய சமூக நியமங்கள் இருக்கின்றன. நமது ஒவ்வொரு செயலையும், எண்ணத்தையும் அது தான் கட்டுப்படுத்துகிறது. சிறு வயதில் இருந்தே அந்த கட்டுப்பாடுகளுக்கு தகுந்த மாதிரி வாழ நாம் பழக்கப்படுத்திக் கொள்கிறோம்.

நம்முள் இருக்கும் குழந்தையை ஒரு பெட்டிக்குள் அடைத்து வைத்துவிடுகிறோம். போட்டி நிறைந்த இந்த உலகில் நம்மை நேசிக்கக்கூட நமக்கு யாரும் கற்று தருவதில்லை. உறவு, மக்கள், பொருள், மகிழ்ச்சி, விருது என பலவிதமான தேடலுடன் நாள்தோறும் ஓடிக்கொண்டே இருக்கிறோம். எப்போது நாம் நம்மை நேசிக்க போகிறோம்.

இதில் முக்கியமாக பாதிக்கப்படுவது பெண்கள் தான். குடும்பம், கணவர், குழந்தைகள் என மற்றவர்களுக்காக வாழும் நமது அம்மாக்கள், அவர்களது வாழ்வை தொலைத்துவிடுகிறார்கள். தனக்காக அம்மாக்கள் வாழ வேண்டும் என்பதை நாம் கற்றுத்தர வேண்டும். தீவிர மன அழுத்தத்தினால் நான் என்னையும் இழந்து, எனது தாயையும் இழக்க இருந்தேன். இப்போது பீனிக்ஸ் பறவை போல் மீண்டும் பறக்க துவங்கி இருக்கிறேன். சிறுவயது முதல் என்னை குதூகலப்படுத்திக் கொண்டிருக்கும் எனது சகோதரனுக்கு நன்றி" என தெரிவித்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News