Kathir News
Begin typing your search above and press return to search.

இரவிலும் தொடங்கியது அதிரடிவேட்டை : எல்லையை அதிரச்செய்த இந்தியாவின் அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் - பம்பி பம்பி பின்வாங்கும் சீன படைகள்!

இரவிலும் தொடங்கியது அதிரடிவேட்டை : எல்லையை அதிரச்செய்த இந்தியாவின் அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் - பம்பி பம்பி பின்வாங்கும் சீன படைகள்!

இரவிலும் தொடங்கியது அதிரடிவேட்டை : எல்லையை அதிரச்செய்த இந்தியாவின் அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் - பம்பி பம்பி பின்வாங்கும் சீன படைகள்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  7 July 2020 8:44 AM GMT

இந்திய விமானப்படையின் (ஐஏஎஃப்) மிக் -29 ரக போர் விமானம் மற்றும் அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர் இந்தியா-சீனா எல்லைக்கு அருகிலுள்ள தளங்களில் இரவு நேர சோதனைகளை நடத்தியது.

"இரவு நடவடிக்கைகளுக்கு பின்னால் பல காரணங்கள் உள்ளது. நவீன தளங்கள் மற்றும் இராணுவ பணியாளர்களின் உதவியுடன் எந்தவொரு சூழலிலும் முழு அளவிலான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள IAF தயாராக உள்ளது, "என்று இந்தியா-சீனா எல்லைக்கு அருகிலுள்ள விமான தளத்தின் மூத்த போர் விமானி மேற்கோளிட்டுள்ளார்.

சமீபத்தில் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் நிலைமையை ஆய்வு செய்ய பிரதமர் மோடி லடாக்கிற்கு விஜயம் செய்தார், பின்னர் காயமடைந்த வீரர்களை லேவில் உள்ள பொது மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை சந்தித்தார். அவர்களுடன் உரையாடும் போது, அவர்களது துணிச்சல் வரவிருக்கும் காலங்களுக்கு உத்வேகம் அளிக்கும் என்று கூறினார். மேலும் 130 கோடி இந்தியர்கள் அவர்களைப் பற்றி பெருமிதம் கொள்கிறார்கள் என்றும் கூறினார்.

"உலகின் எந்தவொரு சக்திக்கும் நாங்கள் ஒருபோதும் தலைவணங்க மாட்டோம்" என்று பிரதமர் சீனாவைப் பற்றிய மறைமுகமாக கூறினார். தற்போது கால்வான் பள்ளத்தாக்கு மோதல்களுக்குப் பின்னர், இந்திய விமானப்படை அதன் அனைத்து முன்னணி வரிசை தளங்களிலும் எச்சரிக்கை அளவை உயர்த்தியுள்ளது.

அப்பாச்சி ஹெலிகாப்டர்கள், நிலத்திலும், வானிலும் சீன அச்சுறுத்தலுக்கு அதிரடி பதிலடியாகக் கருதப்படுகின்றன. ஆயுதந் தாங்கிய வீரர்களை ஏற்றிச் செல்ல பயன்படுவதோடு, டாங்குகளையும் தாக்கி அழிக்கும் திறனும் பெற்ற அப்பாச்சி ஹெலிகாப்டர்கள், இரவு நேரத்திலும் போரில் பயன்படுத்தும் திறன்வாய்ந்தவை. வளைந்து, நெளிந்து, விரைந்து திருப்பி இயக்குவதற்கு ஏற்றவை, எதிரிகளின் கண்ணில் மண்ணைத் தூவும் வகையில் மிகவும் தாழப்பறந்து, செடிகொடிகளுக்குள் மறைந்து நிற்க ஏற்றவை.

எதிரிகளை அழித்தொழிக்கும் போர் எந்திரம் என வர்ணிக்கப்படும் அப்பாச்சி ஹெலிகாப்டரில், 2 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் 1200 ரவுண்டுகள் சுடும் பீரங்கி துப்பாக்கி பொருத்தப்பட்டுள்ளது. ஹெல்ஃபயர் உள்ளிட்ட ஏவுகணைகளை சுமந்து செல்லும் திறன்பெற்றவை.

எதிரிகளின் 128 இலக்குகளை கண்காணித்து, அதில் முதன்மையான அச்சுறுத்தல் எது என்பதைக் கண்டறிந்து, 16 இலக்குகளை குறிவைத்து தாக்கக் கூடிய இந்த ஏஹெச்-64 அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள், எந்தவொரு போரிலும் திருப்பத்தை ஏற்படுத்தக் கூடியவை என கருதப்படுகிறது.

Next Story