Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவில் கொரோனா வைரஸ் மூன்றாம் நிலைக்கு சென்று விட்டதா? ஐசிஎம்ஆர் அதிர்ச்சித் தகவல்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் மூன்றாம் நிலைக்கு சென்று விட்டதா? ஐசிஎம்ஆர் அதிர்ச்சித் தகவல்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் மூன்றாம் நிலைக்கு சென்று விட்டதா? ஐசிஎம்ஆர் அதிர்ச்சித் தகவல்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  10 April 2020 1:41 PM GMT

இந்தியாவில் கொரோனா பரவல் தொடர்பாக ஐசிஎம்ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் இதுவரை இரண்டு ரேண்டம் பரிசோதனை நடத்தி உள்ளது. இதில் முதல் கட்ட ரேண்டம் பரிசோதனையில் சமூகப் பரவல் இல்லை என அறிக்கை சமர்ப்பித்தது. ஆனால் தற்போது இரண்டாம் கட்ட ரேண்டம் பரிசோதனையில் சமூகப் பரவல் என்ற கட்டத்தை கொரோனா வைரஸ் அடைந்துள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்துள்ளது.

இரண்டாம் கட்ட ரேண்டம் பரிசோதனையை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மார்ச் 19ம் தேதி முதல் ஏப்ரல் 2ம் தேதி வரை இந்தியா முழுவதிலும் உள்ள 5911 கொரோனாவால் பாதிக்கப்படாத கடுமையாக சுவாச நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் கொரோனா சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்தப் பரிசோதனையின் முடிவில் 104 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் அதிர்ச்சியூட்டும் தகவல் என்னவென்றால் 104 பேரில், 40 பேர் வெளிநாட்டு செல்லாதவர்கள் என்பதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் தொடர்பு இல்லாதவர்கள் என்பது தான்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அதற்கான புள்ளி விவரம்:

குஜராத்: 792 நோயாளிகளுக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது, 13 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது.

தமிழ் நாடு: 577 நோயாளிகளுக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது, 5 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது.

மஹாராஷ்டிரா: 553 நோயாளிகளுக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது, 21 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த 40 பேருக்கு எப்படிப் பரவியது? இவர்கள் வெளிநாட்டில் இருந்தும் வரவில்லை, இவர்களுக்கு கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் எந்தத் தொடர்பும் இல்லை. டெல்லியில் மாநாட்டுக்குச் சென்று வந்தவர்களும் இல்லை. ஆதலால் இவர்களுக்கு எப்படி பரவியது என்ற கேள்வி எழுகிறது. இதனால் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எந்தெந்த மாவட்டத்தில் அதிக கொரோனா பாதிப்பு உள்ளதோ அந்த மாவட்டத்தில் கண்டைன்மெண்ட் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் பரிந்துரைத்துள்ளது.

Next Story