திமுகவுக்கு மக்கள் வாக்களிப்பார்கள் என்று நம்பிக்கை இருந்தால் ஏன் காப்பரேட் நிறுவனத்தை நாடினார்!
திமுகவுக்கு மக்கள் வாக்களிப்பார்கள் என்று நம்பிக்கை இருந்தால் ஏன் காப்பரேட் நிறுவனத்தை நாடினார்!

மதுரையில் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு திமுகவுக்கு மக்கள் வாக்களிப்பார்கள் என்று நம்பிக்கை இருந்தால் ஏன் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் இன் காப்பரேட் நிறுவனத்தை நாடி இருக்கிறார் என கேள்வி எழுப்பினார்.
திமுக தலைவர் மு க ஸ்டாலின் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தை நாடி இருக்கிறார் என்று சொன்னால், எதிர்க்கட்சித் தலைவர் ஆளுகின்ற கட்சியை பற்றி குறை சொல்லியும் கூட மக்களிடத்தில் எடுபடவில்லை என்று தான் அர்த்தம்,திமுகவுக்கு மக்கள் வாக்களிப்பார்கள் என்று நம்பிக்கை இருந்தால் ஏன் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் இன் காப்பரேட் நிறுவனத்தை நாடினார்,ஆளும் அரசின் மீது மக்களுக்கு குறை இருந்தால் தானாக திமுகவுக்கு வாக்களிப்பார்கள் எனவும் மேலும் திமுகவிடம் சரக்கு இல்லை எனவும் அதனால் அவரிடம் இருக்கிறதா என போய் இருக்கிறார்கள் என விமர்சித்தார்.