பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை தந்தால் நிச்சயம் கொரோனாவை வெல்ல முடியும் - அமைச்சர் விஜயபாஸ்கர்..
பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை தந்தால் நிச்சயம் கொரோனாவை வெல்ல முடியும் - அமைச்சர் விஜயபாஸ்கர்..

சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் "பொதுமக்கள் அனைவரும் தங்களது முழுமையான ஒத்துழைப்பை தந்தால் நிச்சயம் கொரோனாவை வெல்ல முடியும்" என தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையை முதலமைச்சர் தலைமையில் அனைத்து துறைகளும் உள்ளடக்கி போர்க்கால அடிப்படையில் வேலை செய்து வருவதாகவும், மக்கள் நல்வாழ்வுத்துறை மருத்துவர்கள், செவிலியர்களும் 24 மணி நேரமும் அர்ப்பணிப்போடு மருத்துவமனையில் பணியாற்றிக்கொண்டு இருப்பதாகவும் அதே போல களத்தில் காவல்துறை, தீயணைப்புத்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை என எல்லோரும் மக்களுக்காக பணியாற்றும் போது மக்கள் இந்த அவசர நிலையை, அவசிய நிலையை உணர்ந்து முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று முழு ஒத்துழைப்பை வழங்குகின்ற போது நிச்சயமாக வளர்ந்த நாடுகளில் ஏற்பட்ட நிலையில்லாத நிலையை இந்தியாவிலும் தமிழகத்தில் உருவாக்க முடியும் என தெரிவித்தார்.