Kathir News
Begin typing your search above and press return to search.

ரூ.2500 கோடி மோசடி செய்த மன்சூர் கானை துபாயில் வைத்து தூக்கிய இந்திய அதிகாரிகள் - இனி தொடரும் அதிரடி நடவடிக்கை.!

ரூ.2500 கோடி மோசடி செய்த மன்சூர் கானை துபாயில் வைத்து தூக்கிய இந்திய அதிகாரிகள் - இனி தொடரும் அதிரடி நடவடிக்கை.!

ரூ.2500 கோடி மோசடி செய்த மன்சூர் கானை துபாயில் வைத்து தூக்கிய இந்திய அதிகாரிகள் - இனி தொடரும் அதிரடி நடவடிக்கை.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 July 2019 8:09 AM GMT



கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்களிடம் மோசடியில் ஈடுபட்டு தலைமறைவான மன்சூர் கான் கைது செய்யப்பட்டார்.


பெங்களூரில் ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்களிடம் மோசடி செய்ததாக தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளியான ஐ.எம்.ஏ நிறுவனர் மன்சூர் கான் துபாயில் கைது செய்யப்பட்டு இன்று அதிகாலை டெல்லிக்கு விமானம் மூலம் அழைத்து வரப்பட்டுள்ளார்.


2500 கோடி ரூபாய் மோசடிசெய்து வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்ற மன்சூர் கானை கைது செய்ய நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் ஒரு மாத தேடலுக்குப் பிறகு துபாயில் மன்சூர் கான் இருப்பதை கண்டுபிடித்தனர்.


இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகளும் சிறப்பு புலனாய்வு அதிகாரிகளும் துபாய் அதிகாரிகளிடம் தொடர்பு கொண்ட பின் மன்சூர் கான் கைது செய்யப்பட்டார்.


அவரை இந்தியா அழைத்து வர சென்ற அதிகாரிகள் இன்று அதிகாலை 2 மணியளவில் டெல்லி விமான நிலையம் வந்து சேர்ந்தனர். தற்போது அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மன்சூர் கானை பெங்களூர் அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


மன்சூர் கான் ஜூன் மாதம் இந்தியாவை விட்டு வெளியேறினார். அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசும் பிறப்பிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story