ஹோலி பண்டிகைக்கு வாழ்த்து சொன்ன இம்ரான்கானுக்கு பாகிஸ்தானில் கடும் எதிர்ப்பு
ஹோலி பண்டிகைக்கு வாழ்த்து சொன்ன இம்ரான்கானுக்கு பாகிஸ்தானில் கடும் எதிர்ப்பு

இந்தியாவில் வட மாநில இந்துக்கள் கொண்டாடும் கோலாகலமான பண்டிகை ஹோலி பண்டிகை. வண்ண, வண்ண பொடிகள் தூவிக்கொண்டும், ஆடிப்பாடி மகிழ்ந்தும் கொண்டாடப்படும் இந்த வண்ணமயமான பண்டிகை இப்போது இந்தியாவில் பல மாநிலங்களிலும் பரவி வருகிறது.
இந்த நிலையில் அனைத்து மாநில தலைவர்கள் மற்றும் தேச தலைவர்கள் ஹோலி பண்டிகைக்கு வாழ்த்து செய்தி தெரிவித்துள்ளனர். அதேபோல பாகிஸ்தானிலும் ஹிந்துக்கள் வசித்துவருவதால் அந்த நாட்டு பிரதமர் இம்ரான்கான் ஹோலிபண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இது அங்குள்ள பழமைவாதமுள்ள பாகிஸ்தானியர்களுக்கு பிடிக்கவில்லை. ஏராளமானோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் ஒரு முழு இஸ்லாமிக் நாடு என்றும் அதே சமயத்தில் டெல்லி கலவரத்தில் ஏராளமான முஸ்லிம்கள் கொல்லப்பட்ட நிலையில் இந்துக்களுக்கு நீங்கள் எப்படி வாழ்த்து கூறலாம் என்றும் சமூக ஊடகங்களில் மற்றும் போஸ்டர்கள் ஒட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.