தமிழகத்தில் 19 மாவட்டத்தில் 10 நாட்களாக புதிய நோய்தொற்று இல்லை - டாக்டர் ராமதாஸ் பாராட்டு!
தமிழகத்தில் 19 மாவட்டத்தில் 10 நாட்களாக புதிய நோய்தொற்று இல்லை - டாக்டர் ராமதாஸ் பாராட்டு!

தமிழகத்தில் கடந்த 5 நாட்களாக 13 மாவட்டத்தில் புதிய நோய்தொற்று இல்லை, மாவட்ட மக்கள் மற்றும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றிய அதிகாரிகளுக்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் கடந்த 5 நாட்களாக புதிய நோய்த்தொற்றுகள் இல்லை. 6 மாவட்டங்களில் 10 நாட்களாக நோய்த்தொற்றுகள் இல்லை. இது கொரோனா இல்லாத தமிழகத்தை நோக்கிய முன்னேற்றம் குறிப்பிட்டுள்ள அவர். சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் மக்கள், மருத்துவர்கள், அதிகாரிகள், காவல்துறையினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
மேலும் புதிய கொரோனா தொற்றுகள் இல்லை என்ற செய்திகள் பிற மாவட்டங்களில் இருந்தும் வரவேண்டும். நிறைவில் தமிழகம் கொரோனா இல்லாத மாநிலமாக மாற வேண்டும். அதற்கு தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் ஊரடங்கையும், சமூக இடைவெளியையும் முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.