வாரத்தில் ஏழு நாட்கள், 24 மணி நேரம் வேலையில் தான் உள்ளேன் - மோடி பேச்சு
வாரத்தில் ஏழு நாட்கள், 24 மணி நேரம் வேலையில் தான் உள்ளேன் - மோடி பேச்சு

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது.
இதனை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு விதித்துள்ளது.
ஊரடங்கை மேலும் நீடிப்பதற்காக பிரதமர் மோடி அனைத்து மாநில முதலமைச்சர்கள் உடன் இன்று வீடியோ கான்பிரன்ஸ் வழியாக ஆலோசனை மேற்கொண்டார்.
அதில் பிரதமர் மோடி பேசியது, வாரத்தில் ஏழு நாட்கள், 24 மணி நேரம் வேலையில் தான் உள்ளேன் என்னை நீங்கள் எப்போது வேண்டுமென்றாலும் என்னை தொடர்பு கொண்டு பேசலாம் என முதல்வர்களிடம் பேசினார்.
மக்களுக்காக இவர் எடுக்கும் தீவிர நடவடிக்கைக்கும் மற்றும் கொரோனாவை எதிர்த்து போராடி வரும் இவருடைய பணிக்காக நம் இந்தியா மக்கள் அனைவரும் அவரை பாராட்ட வேண்டும். இந்த அளவுக்கு எந்த நாட்டின் பிரதமரும் செயல் படுவார்கள் என்பது தெரியவில்லை.
இந்தியாவிற்காக கடுமையாக உழைக்கும் நம் பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நாம் அனைவரும் ஊரடங்கு உத்தரவை பின்பற்றி வீட்டிலே பாதுகாப்பாக இருக்க வேண்டும்.