ஊரடங்கு சமயத்திலும் 90 சதவீத ஊழியர்களை வீட்டிலேயே பணியாற்ற வைத்து, அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து அசத்திய பேங்க் ஆப் அமெரிக்கா !
ஊரடங்கு சமயத்திலும் 90 சதவீத ஊழியர்களை வீட்டிலேயே பணியாற்ற வைத்து, அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து அசத்திய பேங்க் ஆப் அமெரிக்கா !

பேங்க் ஆப் அமெரிக்காவின் ஐ.டி மற்றும் ஐ.டி தொடர்புடைய செயல்பாடுகளுக்காக பி.ஏ.கான்டினூம் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் சென்னையில் இயங்கி வருகிறது. கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய முடியாது சூழல் உண்டாகியது.
அந்த நிறுவனத்தில் பணிபுரியும் 90 சதவீத ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்றிக் வைத்து சாதித்துக் காட்டியுள்ளது. ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவருக்கும் யு.பி.எஸ் மற்றும் வைஃபை வசதிகளை செய்து கொடுத்து, மூன்று மாத wi-fi கட்டணத்தை நிறுவனமே ஏற்றுக் கொண்டுள்ளது.
During this time, we do not want our teammates to worry about their jobs. We will continue to pay our employees, including those who cannot do their work remotely. pic.twitter.com/wtPVaHErfr
— Bank of America News (@BofA_News) March 27, 2020
யு.பி.எஸ் மற்றும் வைஃபை உபகரணங்களை நிறுவனத்தில் பணிபுரியும் பாதுகாவலர் மூலம் ஊழியர்களின் வட்டுக்கே எடுத்துச் சென்று கொடுக்கப்படுகிறது.
யு.பி.எஸ் கொடுக்க செல்லும் போதும் பல நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறது இந்நிறுவனம்:
1. சானிட்டிசர் பயன்படுத்தி கை கழுவுவது
2. உபகரணங்களை தரை தளத்தில் வைத்து அரசாங்கம் கூறிய அனைத்து நெறிமுறைகளை பின்பற்றுவது
3. சமூக இடைவெளியை கடைப்பிடித்து இரண்டு கையெழுத்துக்கள் காவலர்களால் பெறப்படுகிறது.
பல நிறுவனங்கள் பணியாளர்களை நிறுத்தும் இந்த சமயத்தில், பணியாளர்களுக்கு பல உதவிகள் செய்யும் பாங்க் ஆப் அமெரிக்கவை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.