ஓசூரில் முக கவசங்களுக்கு தட்டுப்பாடு,சில கடைகளில் கூடுதல் விலைக்கு விற்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!
ஓசூரில் முக கவசங்களுக்கு தட்டுப்பாடு,சில கடைகளில் கூடுதல் விலைக்கு விற்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கொரோனா வைரஸ் பாதிப்பு யாருக்கும் ஏற்படவில்லை என அரசாங்கம் தெரிவித்த நிலையில் ஆனாலும் 8 பேர் தீவிர கண்காணிப்பில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அதன் காரணத்தால் பொதுமக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள முகக் கவசங்கள் பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.
கொரோனா வைரஸ் அச்சத்தால் பெங்களூருவில் உள்ள அனைத்து இடங்களிலும் பொது மக்கள் முக கவசம் அணிந்தே பெரும்பாலும் காணப்படுகின்றனர், பெங்களூருவில் உள்ள ஏராளமான மருந்தகங்களை சார்ந்தவர்கள், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள மருந்தகங்களில் முகக்கவசங்கள் வாங்கி சென்று விட்ட காரணத்தால் சில கடைகளில் மட்டுமே முகக் கவசங்கள் கிடைக்கின்றன, இதன் காரணமாக ஓசூரில் முகக் கவசங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி 10 ரூபாய்க்கு விற்க வேண்டிய முக கவசம் தற்போது சில கடைகளில் 40 ரூபாய்க்கு விற்கின்றனர் என பொதுமக்கள் குற்றச்சாட்டு.