இத்தாலியில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 5,476 ஆக உயர்வு!
இத்தாலியில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 5,476 ஆக உயர்வு!

கொரோனா வைரசால் உலகளவில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆயிரத்து 500 தாண்டியுள்ளது. இந்த வைரசால் உலகம் முழுக்க 3 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக இத்தாலி நாட்டில் மட்டும் பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் அந்நாட்டில் மட்டும் 80,000-க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர், சீனாவில் கடந்த 3 நாட்களாக புதிதாக யாருக்கும் பாதிப்பு ஏற்படாத நிலையில் நேற்று மேலும் 6 பேர் பலியாகியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர், இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,261 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்தாலும், இத்தாலி நாட்டில் தாண்டவமாடுகிறது, சீனாவைவிட கொரோனா வைரஸால் பலியானவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் இத்தாலியில் அதிகரித்து வருகிறது, கடந்த 24 மணி நேரத்தில் 651 பேர் பலியாகி உள்ளனர், இதனால் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானவர்களின் எண்ணிக்கை 5,476 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 59 ஆயிரத்து 538 பாதிக்கப்பட்டது சிகிச்சை பெற்று வருகின்றனர்.