Begin typing your search above and press return to search.
போராட்டம் என்ற பெயரில் சட்டத்திற்குப் புறம்பான செயல் படுவதை ஜனநாயக நாட்டில் ஏற்றுக்கொள்ள முடியாது - அமைச்சர் ஜெயக்குமார்!
போராட்டம் என்ற பெயரில் சட்டத்திற்குப் புறம்பான செயல் படுவதை ஜனநாயக நாட்டில் ஏற்றுக்கொள்ள முடியாது - அமைச்சர் ஜெயக்குமார்!

By :
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கு யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கட்சி முடிவு செய்யும், இது குறித்து நான் ஏதும் சொல்ல முடியாது எனவும், எந்த ஒரு அறிவிப்பாக இருந்தாலும் ராஜசபா குறித்து கட்சி தான் முடிவு செய்யும் என தெரிவித்தார்.
அண்மைக்காலமாக போராட்டம் எனும் பெயரில் தற்போது வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்து வரும் நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர் ஜனநாயக நாட்டில் கருத்துக்களை தெரிவிக்கவும் போராட்டம் நடத்தவும் அனுமதி உண்டு எனவும் ஆனால் அதே சமயம் சட்டத்திற்குப் புறம்பான செயல் படுவதை ஜனநாயக நாட்டில் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தார்.
Next Story