135 கோடி மக்கள் உள்ள தேசத்தில் வெறும் 135 நபர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளார்களா? குமுறும் உலக நாடுகள் - பின்னணியில் ஊடக சதி!
135 கோடி மக்கள் உள்ள தேசத்தில் வெறும் 135 நபர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளார்களா? குமுறும் உலக நாடுகள் - பின்னணியில் ஊடக சதி!

உலகம் முழுவதும் கொரோனா பரவியபோதும் இந்தியாவில் இயல்பு வாழ்க்கை எந்த பாதிப்பும் இன்றிப் போய்க்கொண்டிருந்தது. இந்திய அரசும் உலகம் முழுவதிலும் இருந்த இந்தியர்களையும் பிற நாட்டினரையும் காப்பாற்றும் பணியில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டது.
உலக சுகாதார நிறுவனமே இந்தியாவின் செயலை பாராட்டி வருகிறது. உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை கொண்ட நாடு, மற்ற சிறிய நாடுகளை காட்டிலும் சிறப்பாக செயல்பட்டு கொரோனா தாக்க அளவை குறைத்துள்ளதாக அமெரிக்க பத்திரிக்கைகள் பாராட்டியுள்ளன.
இன்னும் ஒரு சில நாட்டு பத்திரிக்கைகள் 135 கோடி மக்கள் உள்ள தேசத்தில் வெறும் 135 நபர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளார்களா? என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றன. ஏற்கனவே கொரோனா விவகாரத்தில் போலி தகவல்கள் முன்பை விட வேகமாக பரவக்கூடும் என்று உளவுத்துறைக்குக் கிடைத்த தகவல்களின்படி மத்திய, மாநில அரசுகளும் கெடுபிடிகளை அமல்படுத்தத் தொடங்கிவிட்டார்கள்.
உலக நாடுகள் இந்தியாவை பாராட்டும் நிலையில், ஒரு சில ஊடகங்கள் நாட்டுக்கு எதிராக விஷமத்தனமான வேலையில் இறங்க கூடும். முதுமையினால் இறப்பவர்களை கொரோனாவால் இறந்ததாக கூறி செய்திகள் திரிக்கப்பட கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் கொரோனாவை விட இந்திய ஊடகங்கள் சிலவற்றை கவனமாக கையாள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.