இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் நடவடிக்கை - அடுத்த 21 நாட்களுக்கு ஒட்டுமொத்த இந்தியாவும் முடக்கப்படுகிறது!
இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் நடவடிக்கை - அடுத்த 21 நாட்களுக்கு ஒட்டுமொத்த இந்தியாவும் முடக்கப்படுகிறது!

நாடு முழுக்க கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலித்து வரும் நிலையில், இன்று இரவு 12 மணி முதல் இந்தியா முழுவதுக்கும் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இன்று இரவு 8 மணி முதல் தொலைக்காட்சி ஊடாக நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார் பிரதமர் மோடி. அப்போது அவர் பேசுகையில், கொரோனா பாதிப்பை தடுக்க வேண்டும் என்றால், மக்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொண்டு இருப்பது ஒன்றே வழி.
மருத்துவர்களும் அதனை தான் பரிந்துரை செய்கின்றனர். அடுத்து வரும் 21 நாட்கள் மிக முக்கியமானது. இந்த நேரத்தில் மக்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு இருப்பது அவசியம்.
இதனை கருத்தில் கொண்டு, இன்று நள்ளிரவு 12 மணி முதல், அடுத்து 21 நாட்களுக்கு நாடு முழுவதுக்கும் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருகிறது. கடந்த மார்ச் 22 ஆம் தேதி "மக்கள் ஊரடங்கு" கடைபிடிக்கப்பட்டது போல, அடுத்து வரும் 21 நாட்களுக்கு மிகுந்த கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலுக்கு வர உள்ளது" என்று பேசி வருகிறார்.