Kathir News
Begin typing your search above and press return to search.

இங்கிலாந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய மருத்துவர் பலி...

இங்கிலாந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய மருத்துவர் பலி...

இங்கிலாந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய மருத்துவர் பலி...

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  8 April 2020 10:55 AM GMT

இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஜிதேந்திர குமார் ரத்தோட் இதய அறுவை சிகிச்சை நிபுணர். இவர் இங்கிலாந்தில் உள்ள வேல்ஸ் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டத்தால் இங்கிலாந்தில் உள்ள கர்டிப் நகரில் ஒரு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனையின் இறுதியில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி ஆனது. பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.

ஜிதேந்திர குமார், 1977 ஆம் ஆண்டு மும்பை மருத்துவ பல்கலைக்கழத்தில் மருத்துவ படிப்பை முடித்தார். பிறகு, 1995 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருக்கும் வேல்ஸ் பல்கலைக்கழக மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை மருத்துவராக அவரது பணியை ஆரம்பித்தார்.


மேலும் சில ஆண்டுகள் பல்வேறு நாடுகளில் வேலை பார்த்துவிட்டு மீண்டும் 2006 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் வேல்ஸ் மருத்துவமனைக்கு திரும்பினார். இவரது மறைவிற்கு இங்கிலாந்து மருத்துவமனை ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றது.

ஜிதேந்திர குமார் ரத்தோட் மிகவும் திறமையானவர், நோயாளிகளுக்கு சிறப்பாக அறுவை சிகிச்சை அளிப்பார். இவர் ஒரு சிறந்த மனிதன் என தெரிவித்துள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News