Top
Kathir News
Begin typing your search above and press return to search.

அமர்நாத் யாத்திரை தீவிபத்தில் ரத்தம் வழங்கியவர்கள் காஷ்மீரிகள், அவர்களின் அமைதிக்காகத்தான் இந்தியா போராடுகிறது : பிரதமர் மோடி பேச்சு

அமர்நாத் யாத்திரை தீவிபத்தில் ரத்தம் வழங்கியவர்கள் காஷ்மீரிகள், அவர்களின் அமைதிக்காகத்தான் இந்தியா போராடுகிறது : பிரதமர் மோடி பேச்சு

அமர்நாத் யாத்திரை தீவிபத்தில் ரத்தம் வழங்கியவர்கள் காஷ்மீரிகள்,  அவர்களின் அமைதிக்காகத்தான் இந்தியா போராடுகிறது : பிரதமர் மோடி பேச்சு

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 Feb 2019 8:33 PM GMT


ராஜஸ்தான் மாநிலம் டோங்க் என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது: காஷ்மீர் தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தோடு இந்தியா மட்டுமல்லாமல், உலகமும் உள்ளது. காஷ்மீர் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் 100 மணி நேரத்திற்குள் பழிவாங்கியது.


அரசு மீது அனைவரும் நம்பிக்கை வைக்க வேண்டும். பயங்கரவாத தொழிற்சாலை தொடர்ந்து இயங்கி கொண்டிருந்தால், உலகில் அமைதி என்பது சாத்தியமில்லை. பயங்கரவாதத்திறகு எதிராக ஒரு மித்த கருத்து உருவாகியுள்ளது. இதில், முழு சக்தியுடன் இந்தியா முன்னணியில் உள்ளது.


காஷ்மீர் மக்களும் பயங்கரவாதத்தால், 40 ஆண்டுகளாக, பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அமைதியை தான் விரும்புகின்றனர். காஷ்மீருக்காக தான் நாம் போராடுகிறோம். அம்மாநில மக்களுக்கு எதிராக போராடவில்லை. காஷ்மீர் மக்கள், இந்தியாவில் எங்கும் தாக்கப்படாமல், அவர்களை காக்க வேண்டியது நமது கடமை. கடந்த ஆண்டு அமர்நாத் யாத்திரையில், தீவிபத்து ஏற்பட்ட போது, பாதிக்கப்பட்டவர்களுக்காக, ரத்தம் வழங்க காஷ்மீர் மக்கள் ஏராளமானோர் முன்வந்தனர்.


காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்திற்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முடிவால், பாகிஸ்தானில் பதற்றம் ஏற்பட்டு உள்ளது . காஷ்மீர் தாக்குதலுக்கு, பாகிஸ்தான் தலைமைக்கு ஏற்பட்ட சோதனை. பயங்கரவாதத்திற்கு எதிராக பேசியவாறு இம்ரான் கான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


Next Story