Kathir News
Begin typing your search above and press return to search.

#Opinion நிலக்கரி சுரங்கங்களை உலகத்திற்குத் திறந்த இந்தியா.! சீனாவுக்கு அனுமதி இல்லை.! அடி மேல் அடி வாங்கும் சீனா?

#Opinion நிலக்கரி சுரங்கங்களை உலகத்திற்குத் திறந்த இந்தியா.! சீனாவுக்கு அனுமதி இல்லை.! அடி மேல் அடி வாங்கும் சீனா?

#Opinion நிலக்கரி சுரங்கங்களை உலகத்திற்குத் திறந்த இந்தியா.! சீனாவுக்கு அனுமதி இல்லை.! அடி மேல் அடி வாங்கும் சீனா?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 Aug 2020 12:57 PM GMT

இந்தியாவை முதுகில் குத்தி, இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணமடையக் காரணமாயிருந்த கால்வான் பள்ளத்தாக்குத் தாக்குதலுக்கு பிறகு சீனா மீது ஒரு பொருளாதார போரைத் தொடுக்க வேண்டும் என்பதற்காக மத்தியில் உள்ள மோடி அரசு பல நடவடிக்கைகளை உறுதியான எடுத்து வருகிறது.

அன்னிய நேரடி முதலீட்டில் (FDI) சில பல மாற்றங்களை செய்து இந்திய நிறுவனங்களை கையகப்படுத்துவதற்கோ, டேக் ஓவர் செய்து விலைக்கு வாங்குவதற்கோ சீன நிறுவனங்களை தடுத்த பிறகு, தற்போது இந்திய நிலக்கரி சுரங்கங்கள் சீன நிறுவனங்களின் கைப்பிடிக்குள் செல்லாமல் தடுப்பதற்காக சில முயற்சிகளை எடுத்து வருகிறது.

இந்த ஜூன் மாத ஆரம்பத்தில் வர்த்தகத்திற்கான நிலக்கரி ப்ளாக்குகளை ஏலம் எடுக்கும் பணிக்காக நமது நிலக்கரி சுரங்கங்களை உலகத்திற்காக திறந்து வைத்தது மோடி அரசு. இப்போது புதிதான வழிகாட்டுதல்களாக, அன்னிய நேரடி முதலீடு காரணமாக வர்த்தக நிலக்கரி சுரங்கங்களில் ஏலம் எடுக்கும் உரிமை, இந்தியாவுடன் நில வழி எல்லையை பகிர்ந்துகொள்ளும் நாடுகளுக்கு, அரசாங்கத்தின் தனி அனுமதிக்குப் பிறகு மட்டுமே கிடைக்கும், என்று வெளியிட்டுள்ளது. இந்தியாவின் நிலக்கரி தொழிலில் நுழைய எதிர்பார்த்துக் கொண்டிருந்த சீன நிறுவனங்களுக்கு இது மிகப்பெரிய அடியாகும்.

குறிப்பிடத்தகுந்த வகையில், மோடி அரசாங்கம் சீனா பெயரை மற்றும் தனிப்பட்டு கூறவில்லை ஆனால் இந்த வழிகாட்டுதல்கள் யாரை எதிர்த்து இருக்கின்றன என்பது மிகவும் தெளிவாகவே இருக்கிறது. சீன சுரங்க நிறுவனங்கள் சீனா ஷென்ஹுவா எனர்ஜி மற்றும் சீனா நிலக்கரி எரிசக்தி ஆகிய நிறுவனங்கள் உலகத்தில் மிகப்பெரிய நிலக்கரி நிறுவனங்களில் ஒன்றாகும். இவை நிலக்கரி சுரங்கங்களில் 100 சதவிகிதம் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டும், ஏலத்தில் கலந்து கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது.

இப்படி வர்த்தக சுரங்கத்தின் நிலக்கரி தொகுதிகளின் ஏல செயல்முறையை தனியாருக்கு திறந்து விடுவது ஒரு முக்கியமான முன்னேற்றமாகும். இதன்மூலம் புதைபடிவ எரிபொருளின் இறுதி பயன்பாட்டிற்கு எந்த தடையும் இல்லாமல் நிலக்கரியை பிரித்தெடுக்க அனுமதிக்கப்படுவார்கள். சீன நிறுவனங்கள் இனிமேல் அரசாங்க அனுமதி பெற்ற பிறகே அவை ஏல நடைமுறைகளில் பங்கெடுக்க அனுமதிக்கப்படுவார்கள். அவ்வாறு அனுமதி, மத்திய அரசு மூலம் கிடைப்பது சாத்தியமில்லை, குறிப்பாக எல்லையில் தற்போது நடந்து வரும் பிரச்சனைகளின் பின்னணியில்.

ஏலங்களின் முதல் கட்டத்தில் மொத்தம் 17 பில்லியன் டன் புவியியல் நிலக்கரி இருப்புடன் 49 சுரங்கங்கள் திறக்கப்படுகின்றன. இந்த 49 சுரங்கங்களும் அந்தந்த மாநிலங்களுக்கு சுமார் 20,000 கோடி வருவாய் ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிகவும் சுவாரஸ்யமாக சீன நிறுவனங்கள் இந்த ஏலங்களில் பங்கேற்காமல் இருப்பது இந்தியாவிற்கு எந்தவித நஷ்டத்தையும் ஏற்படுத்தாது. ஏனெனில், இந்தியா மற்றும் உலகளாவிய நிறுவனங்களிடமிருந்து பல ஆபர்களை இவை பெற்றிருக்கின்றன.

இதற்கு முக்கிய காரணம் என்ன என்றால் இந்த சுரங்கங்கள் முழுமையாக ஆராயப்பட்டவை. எனவே எந்த நேரத்திலும் எளிதாக இவை உற்பத்திக்கு கொண்டு வரப்படலாம். ஏப்ரல் மாத ஆரம்பத்தில் அந்நிய நேரடி முதலீடு கொள்கையை மோடி அரசாங்கம் மாற்றியது. கைத்தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையின் பத்திரிக்கை செய்தியின் படி, இந்தியாவின் அன்னிய நேரடி முதலீடு கொள்கைகள் இப்போது மாற்றமடைந்து இருக்கின்றன. இதற்கு முக்கிய காரணம், மிகவும் கொள்ளை அடிக்க கூடிய சீனாவின் கார்ப்பரேட் களிடமிருந்து நம்முடைய நிதி முதலீடுகளை காப்பதற்காகவே என்று தோன்றுகிறது. இந்த திருத்தி அமைக்கப்பட்ட நமது நிலைப்பாடு பங்களாதேஷ், பாகிஸ்தானி நிறுவனங்கள் மற்றும் மக்கள் அரசாங்க வழியாக மட்டுமே முதலீடு செய்ய முடியும் என்றும் இப்பொழுது இந்த கட்டுப்பாடுகள் மற்றும் திருத்தி அமைக்கப்பட்டு, நிலைப்பாடுகள் விரிவுபடுத்தப்பட்டு, எந்த ஒரு நிறுவனமும் நாடு இந்தியாவிடம் நிலவழி பாதையை கொண்டிருக்கிறதோ அல்லது இந்த முதலீட்டை செய்யும் நபரின் முதலாளி இந்த மாதிரியான எந்த நாடுகளில் குடிமகனாக இருக்கிறாரோ அவர்கள் அரசாங்க வழியில் மட்டுமே முதலீடு செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளது.

இது சீனாவிற்கு மிகுந்த கவலையை அளித்துள்ளது. இந்தியா நிலவழி எல்லையை பகிர்ந்து கொள்ளும் பல நாடுகளில் சீன அன்னிய நேரடி முதலீடு மட்டுமே கவலைக்குரியது. ஏனெனில் இதுதான் சீனாவிற்கு எதிராக, கொரானா வைரஸ் ஆரம்பித்த நாளிலிருந்து, இந்தியா எடுத்த நேரடி முடிவாகும். இந்த திருத்தப்பட்ட FDI கொள்கை, இந்தியக் கம்பெனிகளை காப்பதோடு சீன நிறுவனங்களிடம் இருந்து காப்பதோடு மட்டுமல்லாமல், சீன தொழில் அதிபர்களான அலிபாபா, ஹுவாய் ஆகியோர் இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தொய்வு நிலை காரணமாக தேய்ந்து கொண்டிருக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்து டேக் ஓவர் செய்வதைத் தடுப்பதற்காகவும் இருக்கலாம்.

சீன அன்னிய நேரடி முதலீடு மட்டுமல்ல, இந்திய மார்க்கெட்டுகளில் முதலீடு செய்வதற்கும் இந்தியா சீனாவிற்கு தடை விதித்துள்ளது. சீன வெளிநாட்டு சேவை முதலீடு குறித்தும் ஒரு கண்காணிப்பில் வைத்திருக்க மோடி அரசு முடிவு செய்துள்ளது. இந்திய சந்தைகளில், சீனா முதலீட்டாளர்கள் அதிகபட்சமாக முதலீடு செய்வதை இந்தியா விரும்பவில்லை. நேரடி முதலீடு வழி ஏற்கனவே அடைக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை, சீனாவின் FPIக்கும் இந்த மாதிரியான அனுமதி வழியை கட்டாயப்படுத்த ஆலோசனை செய்து வருகின்றது. மோடி அரசு மேலும் SEBI போன்ற சந்தைக் கண்காணிப்பாளர்களை உடன் சேர்த்து இந்த வழிமுறைக்கு ஆலோசனை செய்து வருகின்றன.

சீனாவிற்கு ஒரு தெளிவான சமிக்ஞை அனுப்புவதற்காக அதன் பொருளாதார ஆதிக்கத்தை இந்தியா தடுத்து வருகிறது. இந்தியாவிடம் பிரச்சினை செய்துவிட்டு எந்த பாதிப்பும் இல்லாமல் தப்பிச் செல்ல இயலாது என்பதை சீனா தற்போது உணர்ந்திருக்கும் அல்லது கூடிய விரைவில் உணரும்.

Translated From: https://tfipost.com/2020/08/china-not-allowed-india-opens-its-coal-mines-for-the-world-but-shuts-the-door-on-china/

Next Story
கதிர் தொகுப்பு
Trending News