மலேசியாவில் சிக்கித் தவிக்கும் 200 மாணவர்களை மீட்க இரண்டு சிறப்பு விமானங்களை அனுப்பியது இந்தியா!
மலேசியாவில் சிக்கித் தவிக்கும் 200 மாணவர்களை மீட்க இரண்டு சிறப்பு விமானங்களை அனுப்பியது இந்தியா!
கொரோனா வைரஸ் காரணமாக மலேசியாவில் சிக்கித் தவிக்கும் 200 மாணவர்களை மீட்க இரண்டு சிறப்பு விமானங்களை அனுப்பியது இந்தியா. பிலிப்பைன்ஸ் நாட்டில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டதால், தமிழகம் உட்பட பல்வேறு மாநில சேர்ந்த மருத்துவ மாணவர்கள் நாடு திரும்பும் வழியில் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் 70 மாணவிகள் உட்பட 200 பேர் மலேசியாவில் சிக்கிக் கொண்டனர்.
இதனை அறிந்த மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை தொலைபேசியில் தொடர்புகொண்டு மலேசியாவில் சிக்கித் தவிக்கும் மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார். அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் டெல்லி மற்றும் விசாகப்பட்டினத்தில் இருந்து கோலாலம்பூருக்கு இரண்டு சிறப்பு விமானம் இயக்கப்படும் என உறுதி அளித்தார். மலேசியாவில் சிக்கித் தவிக்கும் மாணவர்கள் இன்று மாலைக்குள் நாடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.