Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியா-சீன மோதல் : இந்திய வீரர்கள் ஆயுதமில்லாமல் ஏன் சென்றனர்? காங்கிரஸ் அரசு சீனாவுடன் செய்த ஒப்பந்தம் தான் காரணம்.! #IndiaChina #Congress

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  18 Jun 2020 11:34 AM GMT

லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் திங்கள் கிழமை இரவு அன்று நடந்த இந்தியா சீன மோதல்களில் துப்பாக்கியில்லாமல், கம்பி, குச்சி, கற்கள் போன்ற ஆயுதங்கள் வைத்து கைகலப்பானதாகக் கூறப்படுகிறது. சீனா இதை முன்கூட்டியே திட்டமிட்டு செய்ததாகவும், ஆயுதமில்லாமல் பேச்சுவார்த்தைக்கு வந்தவர்களை அடித்தாகவும் கூறப்படுகிறது.

ராகுல் காந்தி, இந்திய வீரர்கள் ஏன் ஆயுதங்கள் இல்லாமல் சென்றனர் என்று ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். ஏதோ, நாம் ஆயுதங்கள் எதுவும் நம்மிடம் இல்லாததால் அப்படி சென்றது போல் குற்றம் சாட்டுகிறார். உண்மையில் ஆயுதங்கள் இல்லாமல் வர வேண்டும் என்பது காங்கிரஸ் அரசாங்கம் சீனாவிடம் போட்ட ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தின் படி, முன் எல்லையை ரோந்து வரும் ராணுவ வீரர்கள் ஆயுதங்கள் வைத்திருக்கக் கூடாது.அப்படி துப்பாக்கி இருந்தாலும் தோளில், தோட்டா இல்லாமல் இருக்க வேண்டும். தோட்டா பையில் இருக்க வேண்டும் என்பது தான் விதி. இது ராகுல் காந்திக்கு தெரிந்தும், ஒப்பந்தத்தை மீறாத நம் மீது குற்றம் சுமத்துவது மக்களை ஏமாற்றி, மோடி அரசின் மீது பழி போடும் செயலாகும்.

1993,1996,2013 ஆகிய வருடங்களில் போட்ட ஒப்பந்தங்களை சீனா மீறியிருக்கிறது என்பதே உண்மை எல்லைக் கோடு குறித்து பிரச்சினை எழும் போது இரு தரப்பினரும் எல்லைக் கோட்டிற்கு பின்னால் சென்று விட வேண்டும் என்பது தான் ஒப்பந்தம். சீனா அவ்வாறு செய்யவில்லை.

Image Courtesy: Economic Times

Next Story