Kathir News
Begin typing your search above and press return to search.

புதிய பாரதத்துடன் மல்லுக்கட்ட முயற்சிக்கும் சீனாவின் வீண் முயற்சி.! #IndiaChina #NewIndia

புதிய பாரதத்துடன் மல்லுக்கட்ட முயற்சிக்கும் சீனாவின் வீண் முயற்சி.! #IndiaChina #NewIndia

புதிய பாரதத்துடன் மல்லுக்கட்ட முயற்சிக்கும் சீனாவின் வீண் முயற்சி.! #IndiaChina #NewIndia

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 July 2020 7:39 AM GMT

கொரானாத் தொற்று நோய் பரவலை எதிர்த்து இந்தியா போராடி வந்த வேளையில்தான், எல்லைப் பகுதியில் சீன ராணுவம் ஊடுருவ முயற்சி செய்த செய்தி நாட்டையே உலுக்கியது. இந்திய ராணுவத்தை சேர்ந்த 20 வீரர்கள் தங்கள் தாய்நாட்டை காப்பதற்காக வீரமரணம் அடைந்தனர். 1967ம் ஆண்டிற்குப் பிறகு, இந்திய-சீன எல்லையில் ஏற்பட்ட மிகப்பெரிய மோதல் இது என்பதால் மீடியாக்களில் இந்த செய்தி வெகு நாளைக்கு ஆதிக்கம் செலுத்தியது. சிலர் இந்திய ராணுவத்தின் வீரத்தையும் இந்திய அரசையும் குறை கூறினர். அப்படி குறை கூறுவது யார் என்பதையும் அவர்களின் வரலாற்றையும் நாம் தோண்டிப் பார்க்கும் போது சுவாரஸ்யமான தகவல்கள் வெளிவருகின்றன.

இந்த கும்பல் அனைத்துமே பிரதமர் நரேந்திர மோடியை தோற்கடிக்க வேண்டும் என்றும் பாரதிய ஜனதா கட்சி எச்சூழலிலும் ஆட்சி அமைத்து விடக்கூடாது என்று ஆர்வத்துடன் செயல்பட்ட கும்பல்கள். இதுநாள் வரை இந்தியாவை ஆட்டிப் படைத்து வருகின்ற, மோசமான தலைமை, அண்டை நாடுகளுடன் உறவு, சமூக பொருளாதாரக் கொள்கைகள் என அனைத்து பிரச்சினைகளுக்கும் இதே கும்பல் தான் காரணம் என்பது தெளிவாக தெரியும்.

ஒருவேளை இந்திய அரசிடம் இருந்து இத்தனை வேகத்தையும் வீரத்தையும் பின்னிருந்து ஆதரவளிக்கும் மக்களையும் சீனா எதிர்பார்க்கவில்லையோ என்னவோ? சமீபத்தில் டோக்லம் மோதலிலும் இப்போது கால்வான் மோதலிலும் சீனா அதைக் கண்கூடாகப் பார்த்தது. 1962 க்கு பிறகு சீனா கொஞ்சம் கொஞ்சமாக நமது எல்லைகளை சுரண்டி கையகப்படுத்த முயற்சித்தது. அந்த அளவுக்கு திட்டமிடப்பட்ட மிகவும் ஆக்ரோஷமான எதிர்ப்பை சீனா எதிர் கொள்ளவில்லை என்பதே உண்மை.

சீனாவை தடுப்பதற்கு இந்திய ராணுவத்தின் தனிப்பட்ட வீர முயற்சிகள் மட்டும் போதாது. அதற்கு பின்னால் இருந்து ஆதரவளிக்க வலிமையான அரசியல் தலைமையும், வலிமையான ராணுவமும், யுக்தி மிகுந்த தலைமையும் மிகவும் அவசியம். இந்த உண்மை 1998ல் அணு ஆயுத அணுகுண்டு சோதனைகளை இந்தியா நிகழ்த்தியபோது தெளிவாக தெரிந்தது.1994 இலேயே இந்தியாவின் அணு ஆயுத விஞ்ஞானிகள், அணுகுண்டு தயாரித்து முடித்து விட்டனர். ஆனால் 98 வரை அதை வெளிப்படுத்துவதற்கான வீரம் அப்போதைய அரசியல் தலைமையிடம் இல்லை. அதை அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களால் மட்டுமே நிறைவேற்ற முடிந்தது.

இந்த முடிவு இந்தியாவின் நிலைமையை உலகில் உயர்த்தியது. 2014லிருந்து இந்தியா, பாகிஸ்தான் ஸ்பான்சர் செய்து வரும் தீவிரவாதிகளை சமாளிக்கும் முறை முற்றிலுமாக மாறிவிட்டது. உரி தாக்குதலாக இருக்கட்டும், பால்கோட் , டோக்லாம், காஷ்மீர் என எல்லா விதத்திலும் நாம் கையாளும் விதம் மாறிவிட்டது.

இந்திய வீரர்களின் ஒப்பிடமுடியாத தியாகத்திற்கும் வீரத்தையும் தாண்டி இந்தியா 1962 போரில் சீனாவுடன் தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணங்களை நாம் ஆராய்ந்து பார்த்தால், அதற்கு முதலில் இந்தியத்தலைமை சீனாவுடன் இப்படி ஒரு மோதல் வரும் என்பதை எதிர்பார்க்கவில்லை. இரண்டாவது, தயாராக இருக்கவில்லை. சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சிகளைப் பற்றி அப்போதைய RSS தலைவர் ஸ்ரீ குருஜி கோல்வால்கர் மற்றும் பல அரசியல் தலைவர்களும், சீனாவை குறித்து எச்சரிக்கைகளை அளித்தனர். ஆனால் அதையெல்லாம் புறக்கணித்தது இந்தியா படுதோல்வி அடைய காரணமாக அமைந்தது

அந்த தோல்விக்கு பிறகு ராணுவத்தில் சீரமைப்பது குறித்த முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால் இராணுவத்தை பலப்படுத்துவது மட்டுமே போதுமானது அல்ல. பக்குவப்பட்ட வலிமையான ஒரு தேசிய தலைமை தான் இத்தகைய பிரச்சனைகளை கையாள தகுதி உடையது.

டிசம்பர் 6, 2013 அன்று அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் திரு AK ஆண்டனி பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரை வீடியோ ஒன்று வெளிவந்தது. அதில் அவர் என்ன கூறுகிறார் என்றால், சீனா எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் இந்தியாவுடன் ஒப்பிடும்போது மிகவும் முன்னேறிய நிலையில் இருப்பதாகவும் நம்மை விட பலம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை அவர்கள் கொண்டிருப்பதாகவும் சுதந்திரமடைந்த காலத்தில் இந்தியா பல ஆண்டுகளாக எல்லைப் பகுதிகளை முன்னேற்றாமல் வைத்திருப்பது தான் நமக்கு பாதுகாப்பானது என்ற ஒரு விசித்திரமான கொள்கையைக் கொண்டு இருந்ததாகவும் அதனால் எந்த கட்டமைப்பு வசதிகளும் நம் பக்கத்தில் ஆரம்பிக்க வில்லை என்றும், சீனா முன்னேறி சென்று தங்கள் பக்கத்தில் கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்திக் கொண்டனர். இதன் காரணமாக இந்தியா மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. இதை ஒப்புக் கொள்கிறேன் இது தான் வரலாறு என்று தெரிவித்தார்

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளை பகுதிகளைப் பொறுத்தவரை 'அணிசேரா நாடுகள்' நம்முடைய கொள்கை என்ற அடிக்கடி தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்தியா உலக அளவில் செல்வாக்குப் பெறும் வரை, அணி சேராமல் இருப்பதை ஒரு யுக்தியாக பயன்படுத்துவது ஒரு நல்ல முயற்சிதான். ஆனால் அது மட்டுமே இந்தியாவின் வெளியுறவு கொள்கைக்கு படியாக இருக்கக்கூடாது.

மே 16,2014 அன்று இந்தியாவின் பாராளுமன்ற முடிவுகள் அறிவிக்கப்பட்டு நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்க அழைக்கப்பட்டது. இந்த சம்பவத்தைப் பற்றி அப்போதைய சண்டே காடியன் பத்திரிகையின் தலையங்கம், "இன்று 18, மே 2014. இன்றைய நாள் கடைசியாக இங்கிலாந்து, இந்தியாவை விட்டு வெளியேறியது என்ற நாளாக குறிக்கலாம்.காங்கிரஸ் கட்சி பலவிதங்களில் பிரிட்டிஷ் ராஜ்யத்தின் தொடர்ச்சி போல் இருந்தது" என்று குறிப்பிட்டனர்.

ஒட்டுமொத்த நாடும் கொரானா பரவலை தோற்கடிக்க வேண்டும் என்று இந்த சமயத்தில் போராடிக்கொண்டிருக்கிறது இதே நேரத்தில் ஆக்கிரமிப்பாளர் மற்றும் சர்வாதிகார சீன அரசிடம் இருந்து நமக்கு வந்துள்ள சவாலை சமாளித்தாக வேண்டும்.நம் நாடு ஒற்றுமையாக இருந்து சீனாவிற்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளும் இந்திய ராணுவத்தின் பின்னால் நின்று, தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மை ஆகிய விஷயங்களில் அரசு எடுக்கும் முடிவுகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்து செயல்பட வேண்டும். அரசியல் ரீதியாக யாருக்கு லாபம் அல்லது நட்டம் பற்றி மட்டும் யோசிக்காமல் ஒரு தேசமாக யோசிக்க வேண்டிய தருணம் இது.

Next Story