Kathir News
Begin typing your search above and press return to search.

உலகின் எந்த சக்தியாலும் நம் நிலத்தின் ஓர் அங்குல பகுதியை கூட எடுத்து செல்ல முடியாது - ராஜ்நாத் சிங் சீன எல்லையில் பேச்சு.! #IndiaChina #RajnathSingh

உலகின் எந்த சக்தியாலும் நம் நிலத்தின் ஓர் அங்குல பகுதியை கூட எடுத்து செல்ல முடியாது - ராஜ்நாத் சிங் சீன எல்லையில் பேச்சு.! #IndiaChina #RajnathSingh

உலகின் எந்த சக்தியாலும் நம் நிலத்தின் ஓர் அங்குல பகுதியை கூட எடுத்து செல்ல முடியாது - ராஜ்நாத் சிங் சீன எல்லையில் பேச்சு.! #IndiaChina #RajnathSingh

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  17 July 2020 10:51 AM GMT

ஜம்மு காஷ்மீர் மற்றும் கிழக்கு லடாக் பகுதியில் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்ய மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று காலை தனிவிமானம் மூலம் லடாக்கில் உள்ள லே பகுதிக்கு சென்றார். லடாக் எல்லையில் இந்தியா மற்றும் சீன ராணுவத்துக்கு இடையே மோதல் ஏற்பட்டு அமைதி திரும்பிய நிலையில் அவரது இந்த பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

லே பகுதிக்கு மேல் இருக்கும் ஸ்டக்னா, லுகுங் பகுதிகளை ராஜ்நாத் சிங் இன்று ஆய்வு மேற்கொள்கிறார். இதன்படி, முதல் நாளான இன்று லடாக் எல்லையில், லுகுங் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சிங் ஆய்வு மேற்கொண்டார். ராணுவ வீரர்களின் சாகச நிகழ்ச்சிகளை பார்வையிட்ட அவர், ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார்.

இதன்பின் லுகுங் பகுதியில் ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய ராஜ்நாத் சிங், எல்லை விவகாரம் (இந்தியா மற்றும் சீனா இடையேயான) பற்றி பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. ஆனால், தீர்வு எட்டப்படுவதற்கு எவ்வளவு காலம் ஆகும் என என்னால் உத்தரவாதம் அளிக்க முடியாது.

நம்முடைய நிலத்தின் ஓர் அங்குல பகுதியை கூட உலகின் எந்த சக்தியாலும் எடுத்து செல்ல முடியாது என நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். பேச்சுவார்த்தை வழியே தீர்வு காணப்பட்டால், அதனை விட சிறந்த ஒன்று எதுவும் இருக்காது.

உங்களை சந்திப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் சமீபத்தில், எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நம்முடைய வீரர்களில் சிலர் செய்த உயிர் தியாகத்திற்காக நான் வருத்தமடைகிறேன். அவர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன் என அவர் பேசியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News