Kathir News
Begin typing your search above and press return to search.

சிறப்புக் கட்டுரை : சீனாவுக்கு பதிலடி கொடுக்க கடற்படை வலிமையை மேம்படுத்தி வரும் இந்தோ- பசிபிக் நாடுகள்.!

அனைத்து நாடுகளும் சீனாவின் ஆக்கிரமிப்புக்கு ஈடுகொடுக்கும் வகையில் தங்களுடைய கடற்படை வலிமையை மேம்படுத்தி வருகின்றன.

சிறப்புக் கட்டுரை : சீனாவுக்கு பதிலடி கொடுக்க கடற்படை வலிமையை மேம்படுத்தி வரும் இந்தோ-  பசிபிக் நாடுகள்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 July 2020 2:48 PM GMT

தன்னுடைய ஆக்கிரமிப்பு கொள்கைகளுக்காக உலக நாடுகள் அனைத்தாலும் நிராகரிக்கப்பட்டுள்ளது சீனா. இதன் காரணமாக சீன ராணுவம் மூர்க்கத்தனமாக மாறியுள்ளது. இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் தெற்கு சீன பகுதி முதல் கிழக்கு சீன பகுதி மற்றும் இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் என, அனைத்து நாடுகளின் உரிமைகளையும் பறிக்கத் சீனா முயற்சித்து வருகிறது.

இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் உள்ள ஒவ்வொரு நாடும் சீனாவை அச்சுறுத்தலாகப் பார்க்க துவங்கி உள்ளன. இதனால் மூர்க்கத்தனமான சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தங்களுடைய கப்பற்படை ஆயுத வசதிகளை மேம்படுத்தி வருகின்றன.

இந்தியா, ஆஸ்திரேலியா, வியட்நாம், தைவான், ஜப்பான் மற்றும் தென் கொரியா என அனைத்து பெரிய நாடுகளும் சீனாவின் ஆக்கிரமிப்புக்கு ஈடுகொடுக்கும் வகையில் தங்களுடைய கடற்படை வலிமையை மேம்படுத்தி வருகின்றன.

சமீபமாக இந்த நடவடிக்கை எடுத்த நாடு தென் கொரியா. விமான தாங்கிகளை தன்னுடைய கப்பல் படையில் சேர்க்க தென்கொரியா முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின் படி தென்கொரியா 20f தட்டி பி ரகசிய ஜம் ஜெட்டுகளை தட்டுகளை வாங்க திட்டமிட்டு வருகிறது. தென் கொரியா விமான தாங்கி வாங்க நடவடிக்கை எடுக்கலாம் என்பதற்கு இதுதான் அறிகுறி. பொதுவாக தென்கொரியா தன்னுடைய வளங்களை தரைப்படைக்கும் , விமானங்களுக்கும் மட்டுமே செலவிட்டு வந்தது. இதற்கு முக்கிய காரணம் தென் கொரியாவிற்கு இராணுவ அச்சுறுத்தல் வட கொரியா நாட்டில் இருந்துதான் வருகிறது. வடகொரியாவில் ஒரு மிகப் பெரியத் தரைப்படை தென் கொரியாவிலிருந்து 30 மைல்களில் உள்ளது

இப்போது முக்கியத்துவம் கப்பல் படைக்கு மாறுவதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. சமீப காலங்களில் மஞ்சள் கடலில் சீனாவுடன் சில பெரிய பிரச்சினைகளை தென்கொரியா சந்தித்து வருகிறது. சீனா மற்றும் தென் கொரியா இரண்டு நாடுகளுமே Exclusive Economic Zone எனப்படும் மஞ்சள் நதியில் 200 நாட்டிகள் மைல் தொலைவில் உள்ள பகுதியை தங்களுடையது என உரிமை கொண்டாடுகின்றனர்.

தென்கொரியா,சீனா இரண்டு நாடுகளுமே ஐக்கிய நாடுகள் கடல் சபையில் (UNCLOS) உறுப்பினர்களாக இருப்பதால் அவர்களின் கடல் எல்லை ஒரு பொதுவான கொள்கையால் தீர்மானிக்கப்பட வேண்டும். ஆனால் சீனா பட்டவர்த்தனமாக இதை மீறி தென்கொரிய கடல் பிராந்தியத்திற்கு சொந்தமான பகுதிகளை தங்களுடையது என உரிமை கொண்டாடுகிறது.

தங்களது சொந்த கடற்படையை வலிமைப்படுத்துவதன் மூலம் சீனாவின் மூர்க்கத்தனத்தை எதிர்கொள்ளவும் சட்டத்திற்கு விரோதமாக நடக்கும் மீன்பிடி தொழிலை மஞ்சள் கடலில் நிறுத்தவும் தென்கொரியா முடிவு செய்துள்ளது.

சீனாவின் மூர்க்கத்தனத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தங்களுடைய கப்பல்படை திறனை அதிகரிக்கும் நாடு தென்கொரியா மட்டுமல்ல, இந்த மாத தொடக்கத்தில் ஜப்பான் ஒரு ரகசிய 'கப்பலைத் தாக்கும் ஏவுகணைகளை' தங்கள் வசப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது இவை சீனாவின் பாதுகாப்பைத் துளைத்துச் செல்லும் என கூறப்படுகிறது.

தாக்கும் சூப்பர் ஏவுகணை எனப் பெயர் பெற்றுள்ள இந்த ASM -3 மிட்சுபிஷி ஹெவி இன்டஸ்ட்ரியால் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு அதிகமாகும் செயல்பட்டு எதிரியுடைய தொழில்நுட்பங்கள் மற்றும் கண்காணிப்பையும் நேரடியாகச் சென்று தாக்கி, போர்க்கப்பல்களை ஒரே அடியில் மூழ்கடிக்கும் திறன் வாய்ந்தது எனக் கூறப்படுகிறது.

இதற்கு முக்கிய காரணம் சீன போர்க்கப்பல்களை பசுபிக் பெருங்கடலில் நுழைய விடாமல் தடுப்பதற்காகவும், அப்படி நுழையும் போது ஏற்படும் ராணுவ தாக்குதலை எதிர் கொள்வதற்காகவும் என்று கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியாவும் கூட தங்களுடைய கப்பல்படை திறனை மேம்படுத்திக் கொள்ள முயற்சி செய்து வருகிறது. சீனாவின் அச்சுறுத்தல் காரணமாக ஆஸ்திரேலியா சமீபத்தில் தங்களுடைய ராணுவ பட்ஜெட்டில் 40 சதவிகிதத்தை அதிகரித்துள்ளன. ஆஸ்திரேலியா 270 பில்லியன் ஆஸ்திரேலியா டாலர்கள் அதாவது 186 மில்லியன் அமெரிக்க டாலர்களை தங்கள் ராணுவத் செயல்பாடுகளுக்காக பயன்படுத்த முடிவு செய்துள்ளன. இது 2016இல் முடிவு செய்யப்பட்ட 195 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர்களை விட மிக அதிகமாகும். இது ஆஸ்திரேலியாவின் 2020 பாதுகாப்பு மூலோபாய மேம்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

இந்தியாவைப் பொறுத்தவரை சீன கடற்படையை நிறுத்திவைக்க இந்தியா பல திட்டங்களை வகுத்து வருகிறது. தன்னுடைய புவியியலை தனக்கு சாதகமாக பயன்படுத்தி வரும் இந்தியா இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடலை இணைக்கும் முக்கிய முனைகளை பாதுகாத்து வருகிறது. ராணுவ தாக்குதல் அதிகரிக்கும் பட்சத்தில் இந்தியா வெற்றிகரமாக சீன கப்பல்களை தடுக்கமுடியும். டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியின்படி இந்தியா தன்னுடைய அனைத்து போர்க் கப்பல்களையும் நீர்மூழ்கி கப்பல்களையும் இந்திய பெருங்கடல் பிராந்தியத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. மேலும் இந்தியா 6 தூர ஏவுகணை தாக்குதல் மற்றும் கண்காணிப்பு விமானம் Poseidon-8I வாங்க முடிவு செய்துள்ளது. இது இந்திய பெருங்கடலில் சீன நடமாட்டத்தை கண்காணிக்க பெருமளவு உதவும் என்று கூறப்படுகிறது. மேலும் தற்போது அந்தமான் நிக்கோபார் தீவுகளை ராணுவ மயமாக்கும் பல முயற்சிகளை எடுத்து உள்ளது.

மற்ற நாடுகளான இந்தோனேசியா, வியட்நாம் ஆகிய நாடுகள் சீனாவை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன. ஏனெனில் பல பகுதிகளை சீனா தன்னுடையது என உரிமை கொண்டாடுகிறது. இந்தோனேசியா, ஆஸ்திரேலியாவிடமிருந்து 15 பைட்டர் ஜெட்களை வாங்க ஆர்வம் காட்டி வருகிறது. சமீபமாக இந்தோனேசிய கடற்படை நான்கு நாட்கள் ஒத்திகை தென்சீனக் கடலில் நடத்தி தங்களது உரிமைகளை நிலை நாட்டி வருகிறது. வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் பொருத்தவரை 6.9 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ராணுவத் துவக்கத்தை பெற்றுள்ளன. இது வியட்நாமுக்கு மட்டுமின்றி இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் உதவி புரியும்.

இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் இருக்கும் ஒவ்வொரு நாடும் மூர்க்கத்தனமான சீனாவை எதிர்த்து பதிலடி கொடுக்கும் விதமாக தங்கள் கப்பற்படைத் திறனை மேம்படுத்தி வருகின்றன என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

Translated From: TFI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News