Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா ஆய்வுக்காக சென்ற சுகாதாரத் துறை பணியாளர்கள் மீது ஊர்மக்கள் கற்களை வீசி விரட்டியடித்த சம்பவத்தால் பரபரப்பு..

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  2 April 2020 7:47 AM GMT

உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தற்போது வரை 1965 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 50 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அறிக்கை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரசை தடுக்க சுகாதாரத் துறை இரவு பகல் பார்க்காமல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் யாருக்காவது பரவியுள்ளதா என வீடு வீடாக சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மத்தியப் பிரதேசம், இந்தூர் மாவட்டம் தத்பட்டி பாகல் பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு அறிகுறிகள் உள்ளனவா என ஆய்வுக்காகச் சென்ற சுகாதாரப் பணியாளர்களை கற்களைக் கொண்டு விரட்டியடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News