Kathir News
Begin typing your search above and press return to search.

இன்போசிஸ் திரு. நாராயணமூர்த்தியிடம் கற்க வேண்டிய inspiring விஷயங்கள் சில..

இன்போசிஸ் திரு. நாராயணமூர்த்தியிடம் கற்க வேண்டிய inspiring விஷயங்கள் சில..

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  2 April 2020 2:24 AM GMT

நாகவரா ராமாராவ் நாரயண மூர்த்தி என்பது முழுப்பெயர், ஆனாலும் இன்போசிஸ் நாராயண மூர்ததி என்ற பெயரே வெகு பிரபலம். இவர் ஆகஸ்ட் 20 ஆம் தேதி பிறந்தவர். மைசூரில் பிறந்து வளர்ந்த மூர்த்தி "நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங், மைசூர் பல்கலைகழகத்தில்" எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்க் படிப்பும், கான்பூர் ஐஐடியில் எம்.டெக் பட்டமும் பெற்றவர்.

இவர் இன்போசிஸ் என்ற சர்வேதேச தொழில்நுட்ப நிறுவனத்தின் முதன்மை நிறுவனர்.. பார்சியூன் என்ற உலகபுகழ் பெற்ற நாளிதழால் 12 சிறந்த தொழிலதிபர்கள் பட்டியலில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டவர். இவருடைய பங்களிப்பை கவனத்தில் கொண்டு, டைம்ஸ் நாளிதழ் இவரை இந்திய தொழில்நுட்ப துறையின் தந்தை என்று வர்ணித்துள்ளது. பத்ம விபூஷன், பத்ம ஸ்ரீ என இன்னும் பல விருதுகள் பெற்ற சாதனையாளர்.

இவர் வாழ்க்கை சொல்லும் பாடங்கள்

1. தவறுகளிலிருந்து கற்றுகொள்ளுங்கள்...

1976 ஆம் ஆண்டு மூர்த்தி அவர்களில் நிறுவிய நிறுவனத்தின் பெயர் "சாப்ட்ரானிக்ஸ்". ஒன்றரை வருடங்கள் நீடித்த இந்த நிறுவனம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காத பட்சத்தில் அடுத்த இலக்கை நோக்கி உறுதியோடு நகர்ந்து சென்றவர்.

2. பெரிதாக கனவுகாணலாம். அதற்காக சிறிய அளவில் அடியெடுத்து வைக்கவும் தயங்ககூடாது....

பல சாதனை கனவுகளை மூர்த்தி அவர்கள் சுமந்திருந்தாலும். 1981 ஆம் ஆண்டு இன்போசிஸ் நிறுவனத்தை மற்ற ஆறு நண்பர்களுடன் மூர்த்தி துவங்கிய போது அவரிடம் போதுமான பொருளாதார வசதியில்லை. இருப்பினும் அவர் மனைவியிடம் 10,000 ரூபாய் கடனாக பெற்று அந்த கனவு நிறுவனத்தை துவங்கினார். இன்று நாட்டின் பொருளாதாரத்தில் பங்கு வகிக்கும் அளவு உயர்ந்துள்ளது இன்போசிஸ்.

3. பொருப்பையும் ஏற்கவும் தியாகங்கள் செய்ய துணிவதும் தலைவருக்கான பண்புகள்...

இன்போசிஸின் ஆரம்ப நாட்களில் மூர்த்தி அவர்கள் தன்னுடைய சம்பளத்தை குறைத்து கொண்டு, அவரோடு இணைந்து பணியாற்றிய நண்பர்களுக்கு 10 சதவீதம் சம்பளத்தை உயர்த்தி கொடுத்தாராம்.

4. எதையும் முதன்மையாக செய்யுங்கள். அதுவும் சரியாக செய்யுங்கள்

இது இன்போசிஸின் வெற்றி ரகசியங்களுள் ஒன்று. இன்போசிஸ் நிறுவனம் பல விஷயங்களை அறிமுகப்படுத்தியதில் முதன்மையானவர்களாக திகழ்ந்திருக்கிறார்கள். உதாரணமாக, நாஸ்டாக் என்ற அமெரிக்க பங்கு சந்தையில் இடம்பெற்ற முதல் இந்திய நிறுவனம் இன்போசிஸ். மற்றும் எண்ணற்ற தர சான்றிதழ்களை வாங்கி குவித்த முதல் இந்திய நிறுவனமும் இதுவே.

இவரின் அனுபவ மொழிகள்...

நம் செயல்திறன் அங்கீகாரங்களை தேடி தருகிறது. அங்கீகாரங்கள் மரியாதையை தேடி தருகிறது. மரியாதை பதவியை தேடி தருகிறது. அந்த பதவியை வகிக்கும் பொழுது நமக்கும் இருக்கும் பணிவும், கனிவுமே ஒட்டு மொத்த நிறுவனத்தின் மேன்மையை, தரத்தை மேம்படுத்துகிறது.

நாம் அனைவரும் எதோவொரு தருணத்தில், நாம் நட்டிராத செடியில் விளைந்த கனியை சுவைத்திருப்போம். நமக்கான காலம் வரும்பொழுது, பதிலுக்கு நாம் ஒரு தோட்டத்தை நட்டுவைக்க வேண்டும். அதில் விளையும் ஒரு கனியை கூட சுவைக்க வாய்ப்பில்லாமல் போகலாம் நமக்கு. ஆனாலும் அரம்பத்தில் நாம் பயனுற்றதை போல் நமக்கு பின் வரும் தலைமுறையினருக்கு அது பயன்படகூடும்.

வெற்றி என்பது தெரிந்தவர், தெரியாதவர், படித்தவர், படிக்காதவர் என எந்த வேறுபாடுமின்றி அனைவர் முகத்திலும் புன்னகையை விதைப்பதே.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News