நயன்தராவால் விக்னேஷ் சிவன் படத்திலிருந்து விலகினாரா சமந்தா?
நயன்தராவால் விக்னேஷ் சிவன் படத்திலிருந்து விலகினாரா சமந்தா?

2015ம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நயன்தாரா நடிப்பில் உருவாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 'நானும் ரவுடி தான்'. இப்படத்தில் நடித்த போது விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் இடையே காதல் மலர்ந்தது.
அதன் பிறகு சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தினை இயக்கினார் விக்னேஷ் சிவன். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
இந்நிலையில் 7 ஸ்க்ரீன் லலித் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' என்ற படம் உருவாகவிருப்பதாக அறிவிப்பு வெளியானது. கடந்த சில தினங்களுக்கு முன் சமந்தா கர்ப்பம் தரித்திருப்பதாகவும், தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படங்களை முடித்துக் கொடுத்து விட்டு நடிப்பிலிருந்து விலகப் போகிறார் எனவும், எனவே 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தில் அவர் நடிக்க மாட்டார் என்ற தகவல் வெளியானது.
இது குறித்து விசாரித்த போது, 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தில் இரண்டு நாயகிகளாக இருந்தாலும், விக்னேஷ் சிவன் படத்தினை இயக்குவதால் நயன்தாராவுக்கு முக்கியத்துவம் இருக்கும் படி தான் கதை இருக்கும் என அஞ்சியதாலேயே சமந்தா படத்திலிருந்து வெளியேறி விடலாமா எனக் கருதியதாகவும், தற்போது விக்னேஷ் சிவன் சமந்தாவிடம் பேசி கதையில் அவருக்கு நயன்தாராவுக்கு இணையான முக்கியத்துவம் இருக்கும் என்ற உறுதியளித்துள்ளதையடுத்து சமந்தா அந்த படத்தில் தொடர்வதாகத் தெரிவித்தனர். சமந்தா கர்ப்பமாக இருப்பதாக வெளியான செய்தியிலும் உண்மை இல்லை எனக் கூறப்படுகிறது.