Kathir News
Begin typing your search above and press return to search.

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் இப்படியும் ஒரு மோசடியா?அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை

இறந்தவர் பெயரை 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் சேர்த்து மோசடி

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் இப்படியும் ஒரு மோசடியா?அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை

KarthigaBy : Karthiga

  |  7 Aug 2022 11:45 AM GMT

இறந்த பெண்ணின் பெயரை 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் சேர்த்து முறைகேடு செய்த அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த செல்வசேகரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் எனது அம்மா அமராவதி கடந்த 2007 ஆம் ஆண்டு மார்ச் 26 ஆம் தேதி முதுமையின் காரணமாக மரணமடைந்தார். ஆனால் அவரது பெயரை 100 நாள் வேலை திட்டத்தில் சேர்த்து ஊதியத்தை அவரது வங்கி கணக்கில் செலுத்தி உள்ளனர்.

அந்த தொகையை எடுப்பதற்காக என் அம்மாவின் வங்கி கணக்கு ஏ.டி.எம். கார்டு கேட்டு கிராம பஞ்சாயத்து செயலாளர் என்னை மிரட்டினார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே என் புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.எம்.டி .

டீக்காராமன் இந்த புகார் குறித்து ஆரம்பகட்ட விசாரணை நடத்த திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை சூப்பிரண்டுக்கு உத்தரவிட்டார்.

இதன்படி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்த துணை சூப்பிரண்டு மனுதாரர் கூறும் குற்றச்சாட்டு உண்மை என்று அறிக்கை தாக்கல் செய்தார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது மனுதாரரின் அம்மா அமராவதி கடந்த 2020 ஆம் ஆண்டே இறந்து விட்டார்.ஆனால் அவரது பெயர் நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் உள்ளது. அவரது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது என்று போலீசார் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

ஆனால் இதே புகாருக்கு மாவட்ட கலெக்டர் ,வந்தவாசி மண்டல உதவி செயற்பொறியாளர் விசாரணை அதிகாரியாக நியமித்து விசாரணை நடத்த கடந்த மார்ச் 7ஆம் தேதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு புகார் பொய்யானது என்று ஏப்ரல் 25-ஆம் தேதி கலெக்டருக்கு அறிக்கை கொடுத்துள்ளார். அவரது விசாரணை அறிக்கையைப் படித்து பார்த்தால் அமராவதி பெயர் நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் உள்ளது.

இந்தத் திட்டத்தின் கழிவறை கட்டும் பணியில் அவர் ஈடுபட்டார் என்று கூறி அவரது வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். ஆனால் இந்த ஆவணங்களில் உள்ள கையெழுத்து தங்களது இல்லை என்று இந்த பஞ்சாயத்து முன்னாள் செயலாளரும் கண்காணிப்பாளரும் கூறுகின்றனர்.

எனவே இந்த மோசடியால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

அதனால் லஞ்ச ஒழிப்பு துறை துணை போலீஸ் சூப்பிரண்டு, வட்டார வளர்ச்சி அதிகாரியின் அலுவலகத்தில் உள்ள ஆவணங்களை ஒட்டுமொத்தமாக பெற்று விசாரிக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் தனிநபர்கள் மீது வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் 3 மாதத்துக்குள் விசாரணையை முடித்து அது குறித்த அறிக்கையை வருகின்ற அக்டோபர் 4 ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.










Next Story
கதிர் தொகுப்பு
Trending News