Kathir News
Begin typing your search above and press return to search.

ஆப்கானிஸ்தான் : சிறைச்சாலை மீது கேரளாவை சேர்ந்த ISIS இஸ்லாமியத் தீவிரவாதி தாக்குதல்.!

ஆப்கானிஸ்தான் : சிறைச்சாலை மீது கேரளாவை சேர்ந்த ISIS இஸ்லாமியத் தீவிரவாதி தாக்குதல்.!

ஆப்கானிஸ்தான் : சிறைச்சாலை மீது கேரளாவை சேர்ந்த ISIS இஸ்லாமியத் தீவிரவாதி தாக்குதல்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 Aug 2020 6:19 AM GMT

ஆப்கானிஸ்தானில் உள்ள சிறைச்சாலையில் மீண்டும் கேரளாவைச் சேர்ந்த ISIS தீவிரவாதி ஒருவன் தாக்குதல் நடத்தியுள்ளான் . கசரகோடைச் சேர்ந்த கல்லுகெட்டியா புரையில் லிஜாஸ், ஞாயிற்றுக்கிழமை அன்று ஜலாலாபாத் சிறைச்சாலையைத் தாக்குதல் நடத்தியதாக உளவுத்துறை அறிக்கை கூறுகின்றது.

தாக்குதலில் 29 மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர் மற்றும் 48 பேர் காயமடைந்துள்ளனர் என்று அட்டாவுல்லா கோக்யானி செய்தியாளருக்குப் பேட்டியளித்த நாங்கர்ஹர் மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள், பாதுகாப்புப் படையினர் மற்றும் கைதிகள் உயிரிழந்துள்ளனர். 10 IS தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். இறந்த தீவிரவாதி ஒருவர் லிஜாஸ் என்று அறியப்பட்டுள்ளது. அவரது மனைவி தற்போது ஆப்கான் ஏஜென்சிஸ் காவலில் உள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, சிறை தாக்குதல் நடத்தியவர்களின் புகைப்படம் இஸ்லாமிய அரசால் வெளியிடப்பட்டது. ISIS அறிக்கையின் படி தாக்குதல் நடத்தியவர்களுள் மூன்று இந்தியர்கள், ஒரு பாகிஸ்தானி, ஒரு ஆப்கான் மற்றும் மூன்று தாஜிக் பயங்கரவாத குழுவைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகின்றது.

ஆப்கான் இராணுவத்தின் உயர் அதிகாரி யாசின் ஜியா, தாக்குதல் நடத்திய இடத்தை பார்வையிடச் சென்ற அவர் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட 10 தீவிரவாதிகள் நடுநிலையானது என்று தெரிவித்துள்ளார். அதி 48 பேர் காயமடைந்ததாகவும் 29 கொல்லப்பட்டதாகவும் நாங்கர்ஹர் மாகாண ஆளுநர் தெரிவித்தாக, தி நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

ஆப்கான் பயங்கரவாத தாக்குதலில் கேரளாவைச் சேர்ந்த ஜிஹாதி ஒருவர் பங்கேற்பது இது முதல்முறை அல்ல. மார்ச் 2020 காபூல் சீக்கிய குருட்வரா மீது நடத்திய பெரும் தாக்குதலில் வாலபட்டணம் ISIS தீவிரவாதி அபூ காலித் அல் -ஹிந்தி மற்றும் அப்துல் காயோம் குற்றம் சாட்டப்பட்டனர். அந்த தாக்குதலில் 27 வழிபாட்டாளர்கள் கொல்லப்பட்டனர்.

அபு காலித் கேரளாவில் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர். 2017இல் NIA குற்றம்சாட்டிய ஐந்து தீவிரவாதிகளுள், அபு காலிதும் ஒருவர், வாலபட்டணம் IS தீவிரவாதிகளுடன் தொடர்புகொண்டதால் குற்றம் சாட்டப்பட்டார்.

அண்மையில், கர்நாடக மற்றும் கேரளாவைச் சேர்ந்த தீவிரவாதிகள் குறிப்பிடத் தக்க எண்ணிக்கையில் ஊடுருவியுள்ளதாக ஐ.நா எச்சரித்துள்ளது. அந்த அறிக்கையின்படி இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள அல்-கைதா தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மியான்மார் சேர்ந்த 150 முதல் 200 நபர்கள் இப்பகுதியில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. 26வது அறிக்கையின் படி அல்-கைதா தீவிரவாதிகள் நிம்ருஸ், ஹெல்மண்ட், காந்தஹார் தலைமையின் கீழ் இயங்குகிறது என்று கூறப்படுகின்றது.


source: https://www.organiser.org/Encyc/2020/8/4/ISIS-attack-on-Jalalabad-Jail.html

Next Story