Kathir News
Begin typing your search above and press return to search.

டெல்லி கலவரத்தில் இந்து கோவில்களை ஆக்கிரமித்து கல், குண்டு வீச்சில் ஈடுபட்ட இஸ்லாமிய அடிப்படை வாதிகள்! பொது மக்கள் பகீர் தகவல்கள்!

டெல்லி கலவரத்தில் இந்து கோவில்களை ஆக்கிரமித்து கல், குண்டு வீச்சில் ஈடுபட்ட இஸ்லாமிய அடிப்படை வாதிகள்! பொது மக்கள் பகீர் தகவல்கள்!

டெல்லி கலவரத்தில் இந்து கோவில்களை ஆக்கிரமித்து  கல், குண்டு வீச்சில் ஈடுபட்ட இஸ்லாமிய அடிப்படை வாதிகள்! பொது மக்கள் பகீர் தகவல்கள்!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 Feb 2020 10:53 AM IST

CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை தேசிய அளவில் இந்து எதிர்ப்பு கலவரமாக மாற்றி வழிபாட்டுத் தலங்களை தாக்கி , கிட்டத்தட்ட 3000 இந்து வர்த்தக நிலையங்களை குறி வைத்து தாக்கி, இந்துக்களின் வீடுகளை தாக்கி எவ்வாறு வெறித்தனமாக இஸ்லாமிய அடிப்படைவாதிகள்கொளுத்தினர் என்று டெல்லியின் சந்த்பாக் குடியிருப்பாளர்கள் கூறினர்.

பல இந்துக்களின் உயிரைப் பறித்ததுடன், இந்துக்கு சொந்தமான கடைகளையும் பல கோயில்களையும் அழித்து இஸ்லாமிய தீவிரவாதிகள் எரித்தனர் என சம்பவ இடத்தை பார்வையிட சென்ற ஒப்இந்தியா பார்வையாளர் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் இந்துக்கள் OP INDIA பத்திரிக்கையாளர்களிடம் கூறுகையில் , டெல்லியில் உள்ள முஸ்தபாபாத் வழியாக முஸ்லிம்கள்கள், பெரும்பாலும் இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக வந்ததாகக் கூறினர். அவர்கள் அனைவரும் சந்த் பாக் பாலத்தில் கூடினர் என்றும், அங்கிருந்து, அவர்கள் ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர் தாஹிர் உசேன் கட்டிடத்தை அடைந்தனர் என்றும், மொட்டை மாடிக்குச் சென்ற அவர்கள் அங்கிருந்து கற்களையும் பெட்ரோல் குண்டுகளையும் வீசத் தொடங்கினர் என்றும் கூறினர்.

சந்த்பாக் பகுதியில் உள்ள சிவன் கோயிலின் பின் வாசல் பகுதியில் ஏணிகளை வைத்து, கோயிலின் கூரை மீது ஏறிய முஸ்லிம் கூட்டம் சிவன் கோயிலைக் கைப்பற்றியதுடன் கோவிலை சூறையாடினர். கோயிலை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்ததைத் தவிர, இஸ்லாமிய குண்டர்கள் சுற்றியுள்ள இந்து வீடுகளையும் கைப்பற்றினர்.

மேலும் சிவன் கோவில் கூரையில் ஏறி அங்கிருந்து இந்துக்கள் மீது கற்களை வீசத் தொடங்கினர். ஒருபுறம் ஆம் ஆத்மி தலைவர் தாஹிர் உசேன் கட்டிடத்தின் கூரையிலிருந்து கல் வீசப்பட்டது, மறுபுறம் கோயிலில் இருந்து கல் வீசப்பட்டது. தாஹிர் உசேன் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து, பெட்ரோல் குண்டுகள் மட்டுமல்ல, செங்கல் துண்டுகள், கற்கள், அமிலப் பொதிகள் மற்றும் கற்களை வீசுவதற்கான கவண் மற்றும் பெட்ரோல் குண்டுகள் கூட கலவரத்துக்குப் பிறகு அங்கிருந்து போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டன.

தாஹிர் உசேன் கட்டிடத்தில் மறைந்திருக்கும் குண்டர்களுக்கு தொடர்ந்து கற்கள் மற்றும் செங்கற்கள் நிறைந்த சாக்குகள் தொடர்ந்து வழங்கப்பட்டதை உள்ளூர்வாசிகள் உறுதிப்படுத்தினர். இது ரிக்‌ஷாக்கள் மற்றும் பைக்குகள் மூலம் தாஹிர் உசேனின் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. மேலும் முஸ்லிம் இளைஞர்கள் பொருட்களை சேகரிக்க கட்டிடத்திற்கு உள்ளேயும் வெளியேயும் சென்று கொண்டும் வந்து கொண்டும் இருந்ததாக அங்குள்ள இந்து மக்கள் கூறினர்.

கலவரம் நடந்த அன்றைய தினங்களில் வெளியில் சென்று வீடு திரும்பிய இந்துக்களை முஸ்லிம்கள் விசாரித்தனர். அப்போது இந்துக்கள் தலையில் முஸ்லிம் குல்லா அணிந்து வந்தும், தங்கள் பெயர்களை இம்ரான், இப்ராஹீம் என முஸ்லிம் பெயர்களாகவும் மாற்றிக் கூறி தப்பித்ததாகவும் மக்கள் கூறினர்.

https://twitter.com/hashtag/DelhiRiots?src=hash&ref_src=twsrc^tfw

https://twitter.com/OpIndia_in/status/1233003850488897536?ref_src=twsrc^tfw

https://twitter.com/hashtag/DelhiAntiHinduRiots2020?src=hash&ref_src=twsrc^tfw



Next Story
கதிர் தொகுப்பு
Trending News