டில்லி நிஜாமுதீன் மசூதியில் மத வழிபாட்டில் பங்கேற்ற 6 பேர் கொரோனா பாதிப்பால் பரிதாப பலி - அரசு உத்தரவை மீறி அட்டூழியம்!
டில்லி நிஜாமுதீன் மசூதியில் மத வழிபாட்டில் பங்கேற்ற 6 பேர் கொரோனா பாதிப்பால் பரிதாப பலி - அரசு உத்தரவை மீறி அட்டூழியம்!

டில்லியின் நிஜாமுதீனில் உள்ள மசூதியில் மார்ச் 13 முதல் மார்ச் 15 வரை மதவழிபாடு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சுமார் 200 பேர் வரை கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் சில வெளிநாட்டவர்களும் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டவர்களில் தெலுங்கானாவைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதை தெலுங்கானா மாநில அரசு மார்ச் 30 அன்று உறுதிபடுத்தியுள்ளது.
உயிரிழப்புகளை தொடர்ந்து, மசூதியில் வழிபாடு நடந்த பகுதியில் பலருக்கு பாதிப்பு இருக்ககூடும் என்பதால் காவல்துறையினர் அந்த பகுதிக்கு சீல் வைத்துள்ளனர். கொரோனா தொற்று இருக்குமா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பலரையும் மருத்துவமனையில் சோதனைக்காக அனுமதித்தனர்.
அரசு விதித்த தடை உத்தரவை மீறி கூட்டம் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதை ஏற்பாடு செய்தவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் கொரோனா நோய் தொற்று தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு நோய் தொற்று இருந்தாலும், அது தொடர்பான தகவல்கள் தெரிந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என தெலுங்கானா மாநில சுகாதாரத்துறை கூறியுள்ளது. தெலுங்கானாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.