Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா விவகாரத்தால் சீனாவில் இருந்து வெளியேறும் ஜப்பானிய, ஐரோப்பிய நிறுவனங்கள், வாய்ப்புகளை அலாக்காக கேட்ச் பிடிக்கும் உ.பி. முதல்வர் ஆதித்யநாத்.!

கொரோனா விவகாரத்தால் சீனாவில் இருந்து வெளியேறும் ஜப்பானிய, ஐரோப்பிய நிறுவனங்கள், வாய்ப்புகளை அலாக்காக கேட்ச் பிடிக்கும் உ.பி. முதல்வர் ஆதித்யநாத்.!

கொரோனா விவகாரத்தால் சீனாவில் இருந்து வெளியேறும் ஜப்பானிய, ஐரோப்பிய நிறுவனங்கள், வாய்ப்புகளை அலாக்காக கேட்ச் பிடிக்கும் உ.பி. முதல்வர் ஆதித்யநாத்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  15 April 2020 5:18 AM GMT

உலகை அச்சுறுத்தி வரும் கொடூர கொரோனாவின் பிடியில் இன்று 150 க்கும் மேலான நாடுகள் சிக்கியுள்ளன. குறிப்பாக உலக நாடுகளில் அதிக அளவில் முதலீடு செய்யும் அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகளும், ஜப்பானும் கூட மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளன. இந்த நிலையில் கொரோனாவை முதன் முதலாக பரப்பிய சீனா போதுமான முன்னெச்சரிக்கையை மற்ற நாடுகளுக்கு வழங்காததாலும், பல தகவல்களை மறைத்ததாலும்தான் இந்த நாடுகள் இன்று நிம்மதியை இழந்துள்ளது.

இதனால் சீனாவின் மீது கடும் கோபத்தில் உள்ளன. இதனால் சீனாவில் பல்வேறு நிறுவனங்களை தொடங்கி நடத்தி வரும் ஐரோப்பிய நாடுகளும், ஜப்பானும் தங்கள் நிறுவனங்களை சீனாவில் இருந்து வெளியேற்றிவிட விரும்புகின்றன. வெளியேறும் அந்த நிறுவனங்களை பாதுகாப்பான, வலிமையான அரசுகள் கொண்ட, நிர்வாக செலவுகளில் சிக்கனமான நாடுகளான இந்தியா, வியட்நாம், வங்க தேசம் போன்ற நாடுகளுக்கு மாற்ற திட்டமுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

இந்த வகையில், ஜப்பான் தனது பொருளாதாரத்தில் 20 சதவீதத்தும் ஈடான 108.2 டிரில்லியன் யென் (993 பில்லியன் அமெரிக்க டாலர்) தொகையை ஒதுக்கி தனது நாட்டு நிறுவனங்களுக்கு உதவ முன்வந்துள்ளதாக சில நாட்களுக்கு முன் அறிவித்தது. மேலும் பல நிறுவனங்களை சீனாவில் இருந்து காலி செய்யவும் அதற்கான செலவுகளுக்காக 2.2 பில்லியன் அமெரிக்க டாலர்களையும் ஒதுக்கியுள்ளது.

இந்த நிலையில் 220 பில்லியன் யென் (2 பில்லியன் டாலர்) மதிப்புள்ள உற்பத்தி செய்யும் ஜப்பானிய நிறுவனங்கள் உற்பத்தியை தங்கள் சொந்த நாடான ஜப்பானுக்கு மாற்றுவதற்கும், மீதமுள்ள 23.5 பில்லியன் யென் மதிப்புக்கு உற்பத்தியை செய்யும் நிறுவனங்களை மற்ற நாடுகளுக்கு கொண்டு செல்ல விரும்புவோருக்கும் ஏற்பாடுகளை செய்ய ஜப்பான் அரசு உறுதி அளித்துள்ளது.

ஜப்பான் மட்டுமல்லாமல் சீனாவில் உற்பத்தி தளங்களை கொண்ட ஐரோப்பிய, அமெரிக்க நிறுவனங்களும் இதே போன்ற முடிவுகளை எடுத்துள்ளன.

இந்த நிலையில் உத்தரபிரதேசத்தில் உள்ள யோகி அரசாங்கம் இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ளது. மேற்படி நிறுவனங்களை கவர்ந்து தனது மாநிலத்தில் அமைப்பதற்கேற்றவாறு முதலீடுகளை கவரும் ஒரு சிறப்பு தொகுப்பு திட்டத்தை தயாரிக்குமாறு முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது மாநில தொழில்துறை மேம்பாடு மற்றும் எம்எஸ்எம்இ துறைக்கு அறிவுறுத்தியுள்ளார். இது எங்கள் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் முயற்சிக்கு கிடைக்கும் நல்ல வாய்ப்பாக இருக்கும் என்று உ.பி. கூடுதல் தலைமை செயலாளர் அவனிஷ் குமார் அவஸ்தி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

தனியார் முதலீட்டை ஈர்ப்பதற்காக யோகி அரசு கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு முதலீட்டாளர் உச்சி மாநாடுகளையும் கண்காட்சிகளையும் ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்வுகள் மிகவும் வெற்றிகரமாக நடந்துள்ளன. ஏற்கனவே உ.பியில் நடைபெற்ற.முதலீட்டாளர் உச்சிமாநாட்டில் 4.68 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்க்கும் மாநாட்டில் பாதுகாப்பு கண்காட்சியில் வைக்கப்பட்ட திட்டங்களில் மட்டும் 70,000 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யப்படும் என்ற வாக்குறுதி பெறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உத்தர பிரதேசத்தை சிறந்த தொழில் மாநிலமாக மாற்றும் திறன் கொண்டதாக யோகி அரசு உள்ளதாகவும், ஆனால் இதற்கு முன்பு இங்கு ஆட்சியில் இருந்த அகிலேஷ் யாதவ் அரசாங்கம் தொழிலதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாகவும் பல பதிவுகள் உள்ளன. அவர்கள் அதிக அளவில் தனியார் நிறுவனங்களிடமிருந்து கட்சி வளர்ச்சி நிதி என்ற பெயரில் பகல் கொள்ளை அடித்ததாகவும், நிதி தராதவர்கள் பலர் தாக்கப்பட்டதாகவும்,சிலர் கொல்லப்பட்டதாகவும் அதனால் அங்கு தொழில் வளர்ச்சி ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

Source: https://tfipost.com/2020/04/leave-china-and-come-to-up-yogi-government-plans-special-package-to-woo-companies-fleeing-china/

Next Story
கதிர் தொகுப்பு
Trending News