ஜோதிராதித்யா சிந்தியா விரைவில் மத்திய கேபினட் அமைச்சராவார் ! மூத்த காங்கிரஸ் தலைவர் நட்வர்சிங் வாழ்த்து!
ஜோதிராதித்யா சிந்தியா விரைவில் மத்திய கேபினட் அமைச்சராவார் ! மூத்த காங்கிரஸ் தலைவர் நட்வர்சிங் வாழ்த்து!

முன்னாள் மத்திய வெளியுறவு அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான நட்வர் சிங் இன்று (மார்ச் 10) தனது டுவிட்டரில் பின் வருமாறு கருத்து தெரிவித்தார்.
அதில்,
ஜோதிராதித்யா சிந்தியாவின் வெளியேற்றம் எனக்கு எந்த ஆச்சரியத்தையும் தரவில்லை, சிந்தியா இப்போது பாஜகவில் சேர்ந்து கேபினட் அமைச்சராவார் என்று பெருமையுடன் கூறினார்.
இது குறித்து மேலும் விளக்கம் கேட்ட ANI செய்தி நிறுவனத்துக்கு அவர் பதில் கூறுகையில் "ஜோதிராதித்யா சிந்தியாவின் தந்தை மாதவ்ராவ் சிந்தியா இந்நேரம் உயிருடன் இருந்திருந்தால் அவர்தான் இந்தியாவின் பிரதமராக இருந்திருப்பார்" என்றும் கூறினார்.
ஜோதிராதித்யா சிந்தியாவின் தந்தை மாதவ்ராவ் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னணி ஆட்சியின்போது கேபினட் அமைச்சராக இருந்தவர். மூத்த காங்கிரஸ் தலைவரான அவர் 2002 ஆம் ஆண்டு நடந்த விமான விபத்தில் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.