கொரோனா தொற்றைவிட கமலின் ட்விட்டர் பதிவு கொடியது.. நெட்டிசன்கள் கேலி.!
கொரோனா தொற்றைவிட கமலின் ட்விட்டர் பதிவு கொடியது.. நெட்டிசன்கள் கேலி.!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. இதற்காக மக்கள் 21 நாட்கள் ஊரடங்கை கடை பிடித்து வருகின்றனர்.
வீட்டில் இருக்கும் மக்களை கோபம் அடைய செய்வது போன்று நடிகர் கமல் ட்விட்டர் பதிவு அமைந்துள்ளது என்று வலைதளவாசிகள் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சி தலைவருமான கமல், தன்னை தாமாகவே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
ரசிகர்களிடையே நேரடியாக பேச முடியாத காரணத்தினால், ட்விட்டர் மூலமாக கலந்துரையாடுகிறார்.
அவரின் பல ட்விட்டர் பதிவுகள் குழப்பமாகவும், சம்பந்தம் இல்லாமல் போடும் பதிவுகளால், தேவையற்ற விமர்சனம் எழுகிறது என்றும் அவரது கட்சியினரே கூறுகின்றனர்.
ட்விட்டரில் நேற்று கமல், போருக்கு ஆயுதம் இன்றி, வீரர்களை அனுப்புவது நியாயமா; முறையான பாதுகாப்பு உபகரணங்கள் கேட்கும், மருத்துவ ஊழியர்களின் குரலுக்கு செவி மடுக்க வேண்டும்.
அரசு உடனடியாக, மருத்துவ ஊழியர்களின் கோரிக்கையை, போர்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.
மாவட்ட செயலர்களுக்கு, ட்விட்டர் பதிவை ஒன்றையும் நேற்று முன்தினம் அனுப்பியுள்ளார்.
அதில், இது ஒரு நோய் நரகமல்ல; இதை வெல்வது உறுதி. போலி அரசியல் பூசாரிகள், போக்கிடம் இல்லாமல் திரிவர். அவர் கூற்றுக்கு இரையாகாதீர். காலி இடம் நிரப்புவதற்கு, நாம் கிடையாது.
நாம் புத்துயிர், புதிய உலகம்; ஆதலால், நாளை நமதே' என, கூறினார்.
இப்போது எதற்காக இந்த பதிவு என்று அவரது கட்சியில் உள்ள பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இது போன்று புரியாத மாதிரி எழுதுவது, கொரோனாவை விட கொடியது என்று வலைதள வாசிகள் கிண்டலடித்துள்ளனர். இந்த பதிவு மட்டுமின்றி பல்வேறு பதிவுகள் புரியாத புதிராகவே உள்ளது.