பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவித்த கமல்!
பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவித்த கமல்!
கரோனா நோயை கட்டுபடுத்தவும், தடுக்கவும் மத்திய அரசு தீவிரமாக பணியாற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 19ம் தேதி மக்களுக்காக உரையாற்றிய பிரதமர் மோடி வரும் 22ம் தேதி 'சுய ஊரடங்கு' முறையை அமல்படுத்த வேண்டுகோள் விடுத்தார். இதற்க்கு அமிதாப் பச்சன் உட்பட திரையுலக பிரபலங்கள் மற்றும் விளையாட்டு பிரபலங்கள் தங்கள் ஆதரவை தெரிவித்து வரும் நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல் ஹாசன் தனடு ஆதரவை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் "மக்கள் ஊரடங்குக்கான பிரதமரின் அறைகூவலுக்கு நான் முழு ஆதரவு தருகிறேன். இந்த அசாதாரண சூழ்நிலையில் நாம் அசாதாரணமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நம் இனத்தைப் பிடித்துக்கொண்டிருக்கும் பேரழிவு இது.
எல்லோரும் வீட்டிலிருந்தால் நம்மால் பாதுகாப்பாக இருக்க முடியும். மார்ச் 22-ம் தேதி ஞாயிறு அன்று, காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை, இந்த முயற்சிக்கு ஆதரவு அளிக்க நான் என் ரசிகர்கள், நண்பர்கள், என் மக்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார் கமல்.
மேலும் இந்த முயற்ச்சிக்கு ஆதரவு அளிக்குமாறு கூறும் வகையில் ரஜினி, விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு, விஜய் சேதுபதி, அனிருத், ஜி.வி.பிரகாஷ், ஜிப்ரான் மற்றும் தேவி ஸ்ரீபிரசாத் ஆகியோரின் டிவிட்டர் ஹேண்டிலை டேக் செய்துள்ளார். மேலும் டிவிட்டரில் இல்லாத காரணத்தால் அஜித் மற்றும் இளையாராஜாவின் பெயர்களை ஹேஷ் டேகில் குறிப்பிட்டுள்ளார்.