எச்சில் துப்பினீங்க ₹100 அபராதம் - மாவட்ட ஆட்சியர் அதிரடி!
எச்சில் துப்பினீங்க ₹100 அபராதம் - மாவட்ட ஆட்சியர் அதிரடி!

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை ஒருவருக்கு கூட கொரோனா தொற்று பாதிக்கப்படவில்லை. மேலும், மாவட்ட எல்லைகளுக்கு சீல் வைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா, கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் காட்டும் வழிகாட்டலை காரைக்கால் மாவட்ட மக்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் சாலைகளில் செல்லும் போதும் பொது இடங்களிலும் எச்சில் துப்புதல் கூடாது என்றும் வீட்டிலிருந்து வெளியே வருவோர் அனைவரும் கண்டிப்பாக முகக் கவசம் அணியவேண்டும் என்றும் அப்படி மீறுபவர்கள் மீது ₹100 அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மக்கள் இருமல், தும்மல் வரும்போது கைக்குட்டையால் மூடவேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.