Kathir News
Begin typing your search above and press return to search.

கர்நாடகா விவகாரம்: உச்ச நீதிமன்ற தீர்ப்பு முக்கிய அம்சங்கள் !! நாளை எதுவும் நடக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து !!

கர்நாடகா விவகாரம்: உச்ச நீதிமன்ற தீர்ப்பு முக்கிய அம்சங்கள் !! நாளை எதுவும் நடக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து !!

கர்நாடகா விவகாரம்: உச்ச நீதிமன்ற தீர்ப்பு முக்கிய அம்சங்கள் !! நாளை எதுவும் நடக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து !!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  17 July 2019 1:33 PM GMT


கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில் சபாநாயகர் முடிவெடுக்கலாம் எனவும், அதே சமயத்தில் அதிருப்தி எம்எல்ஏ க்களுக்கு கொரடா உத்தரவிட முடியாது எனவும் உச்சநீதிமன்றம் விசித்திரமான, பரபரப்பான தீர்ப்பளித்துள்ளது.


இந்த தீர்ப்பை எடியூரப்பா, குமாரசாமி மற்றும் காங்கிரஸ் தரப்பினர் வரவேற்றாலும் அதிருப்தி எம்எல்ஏ க்களுக்கும் , சபாநாயகருக்கும் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக அதிருப்தி எம்எல்ஏ க்களுக்கு கொரடா உத்தரவிட முடியாது என கூறப்பட்டுள்ளது, இதனால் நாளை எது வேண்டுமென்றாலும் நடக்கலாம் எனக் கூறப்படுகிறது. அதாவது சீத்தாராமையாவை முதல்வராக ஏற்க மேற்கண்ட எம்எல்ஏக்கள் முன் வந்துவிட்டால் காங்கிரஸ் ஆட்சி அமைக்கவும் வாய்ப்புண்டு. அதிருப்தி எம்எல்ஏ க்கள் வராமல் போய்விட்டால் ஆட்சி கவிழ்ந்து கவர்னர் எடியூரப்பாவை அழைக்கவும் வாய்ப்புண்டு என கூறப்படுகிறது.


இத் தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்


எம்.எல்.ஏக்கள் ராஜினாமா குறித்து கர்நாடகா சபாநாயகர் முடிவெடுக்கலாம்.


சபாநாயகர் தமது முடிவெடுக்கும் கால வரையறையை அவரே நிர்ணயித்துக் கொள்ளலாம்.


சபாநாயகர் முடிவெடுக்க காலக்கெடு எதுவும் நிர்ணயிக்க முடியாது


அப்படி முடிவு எடுக்கும் போது உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்துகளை அவர் கருத்தில் கொள்ள தேவை இல்லை.


சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் போது ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என சபாநாயகர் வலியுறுத்தக் கூடாது.


அதாவது ஜேடிஎஸ்- காங்கிரஸ் கட்சிகளின் கொறடாக்களின் உத்தரவு இந்த எம்.எல்.ஏக்களை கட்டுப்படுத்தாது.


தற்போது பிறப்பிக்கப்பட்டிருப்பது இடைக்கால உத்தரவு மட்டுமே.


இவ்வழக்கில் சபாநாயகரின் அதிகாரம் தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.


அது தொடர்பாக விரிவான விசாரணை பின்னர் நடத்தப்படும். இவ்வாறு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


Next Story