Kathir News
Begin typing your search above and press return to search.

கை, கால்கள் செயல்படாமல் படுக்கையில் இருந்த மூன்று பிள்ளைகள் : குடும்பத்திற்கு உதவி புரிந்த பா.ஜ.க

கை, கால்கள் செயல்படாமல் படுக்கையில் இருந்த மூன்று பிள்ளைகள் : குடும்பத்திற்கு உதவி புரிந்த பா.ஜ.க

கை, கால்கள் செயல்படாமல் படுக்கையில் இருந்த மூன்று பிள்ளைகள் : குடும்பத்திற்கு உதவி புரிந்த பா.ஜ.க

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 April 2020 2:00 AM GMT

கொரோனா பாதிப்பால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பல ஏழை எளிய குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அரசாங்கம், தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பலரும் அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில், ட்விட்டர் பதிவு மூலம் கேட்கப்பட்ட உதவிக்கு சுறுசுறுப்பாக உதவி புரிந்து அசத்தியுள்ளனர் பா.ஜ.க-வினர். நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டம், துளசியபட்டினத்தில் உள்ள ஒரு குடும்பத்தில் உள்ள மூன்று பிள்ளைகளுக்கும் கை,கால்கள் முற்றிலும் செயல்படாமல் படுக்கையில் உள்ளனர் என்றும் கணவர் முன்பு சிறிய கடை வைத்து பால் வியாபாரம் செய்து, தனது மூன்று செயல்பட முடியாத குழந்தைகளை கவனித்து வந்தார் எனவும் அவர்களுக்கு தற்போது உதவி தேவைப்படுகிறது என்றும் ட்விட்டர் வாசி ஒருவர் பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவை அடுத்து, தமிழக பா.ஜ.க பொதுச்செயலாளர் திரு கருப்பு முருகானந்தம் மூலம் கட்சி நிர்வாகிகள் நேரில் சென்று அந்த குடும்பத்திற்கு தேவையான உதவிகளை புரிந்துள்ளனர்.

இந்த செயலை பலரும் ட்விட்டரில் பாராட்டி வருகின்றனர்..

Next Story