Kathir News
Begin typing your search above and press return to search.

பாரபட்சம் வேண்டாம்: பயங்கரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு காஷ்மீர் கவர்னர் உத்தரவு

பாரபட்சம் வேண்டாம்: பயங்கரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு காஷ்மீர் கவர்னர் உத்தரவு

பாரபட்சம் வேண்டாம்: பயங்கரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு காஷ்மீர் கவர்னர் உத்தரவு

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 Feb 2019 5:13 PM GMT


வன்முறையாளர்கள், வதந்திகளை பரப்புபவர்கள், பயங்கரவாதிகளின் மதம் மற்றும் அரசியல் சார்புகளைப்பற்றி கருதாமல், கருணை காட்டாமல் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு காஷ்மீர் கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.


ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு புல்வாமா மாவட்டத்தில் துணை ராணுவப்படையினர் பேருந்தில் சென்றனர். அப்போது, அவந்திபோரா நெடுஞ்சாலையில் பேருந்து சென்றபோது, அதன் மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப்படை தீவிரவாதி 350 கிலோ வெடிபொருட்களுடன் காரை மோதி வெடிக்கச் செய்தார். புல்வாமா தாக்குதலை தொடர்ந்து நாட்டில் நிலவிவரும் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து உளவுத்துறை மற்றும் காவல்துறைகளை சேர்ந்த உயரதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து, ஜம்முவில் உள்ள ராஜ்பவனில் காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக் அம்மாநில உள்துறை மற்றும் காவல்துறை உயரதிகாரிகளுடன் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலவரம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பின்னர், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபடுபவர்கள், வதந்திகளை பரப்புபவர்கள் மற்றும் பயங்கரவாதிகளின் மதம் மற்றும் அரசியல் சார்புகளைப் பற்றி கருதாமல் கருணை காட்டாமல் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு காஷ்மீர் கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News