Kathir News
Begin typing your search above and press return to search.

காஷ்மீரில் இணைய சேவை மீண்டும் தொடங்கியது!!

காஷ்மீரில் இணைய சேவை மீண்டும் தொடங்கியது!!

காஷ்மீரில் இணைய சேவை மீண்டும் தொடங்கியது!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  17 Aug 2019 10:58 AM GMT


ஜம்மு-காஷ்மீரில் மொபைல்களுக்கான இணைய சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டது.


ஜம்மு-காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து வழங்கும் சிறப்பு சட்டப்பிரிவு நீக்கம் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.அவ்வகையில் பயங்கரவாதிகள் தவறாகப் பயன்படுத்தியதால், ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் அப்பகுதியில் இணைய சேவை முற்றிலுமாகதுண்டிக்கப்பட்டது.





இந்நிலையில், ஜம்மு, சம்பா, கத்துவா, உதம்பூர், ரேஸி உள்ளிட்ட பகுதிகளில் இணைய சேவை இன்று (சனிக்கிழமை) முதல் மீண்டும் தொடங்கப்பட்டது.இதையடுத்து அனைத்து தொலைத்தொடர்பு சேவைகளும் விரைவில் வழங்கப்பட உள்ளது.


ஜம்மு, லடாக் பகுதிகளில் இயல்பு நிலை மீண்டும் திரும்பி வருகிறது. 144 தடை உத்தரவுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. பள்ளி, கல்லூரிகள் மற்றும்அலுவலகங்கள் உள்ளிட்டவை வழக்கம்போல் இயங்கி வருகின்றன.





காஷ்மீர் பகுதியில் நேற்று அலுவலகங்கள் இயங்கின. பள்ளி – கல்லூரிகள் திங்கள்கிழமை முதல் வழக்கம்போல் இயங்கும் என்று ஆளுநர் சத்தியபால்மாலிக் உத்தரவிட்டுள்ளார்.


Next Story