புல்வாமாவில் 42 வீரர்களை கொன்ற பயங்கரவாதிக்கு புகலிடம் கொடுத்த காஷ்மீரை சேர்ந்த தந்தை, மகள் கைது!
புல்வாமாவில் 42 வீரர்களை கொன்ற பயங்கரவாதிக்கு புகலிடம் கொடுத்த காஷ்மீரை சேர்ந்த தந்தை, மகள் கைது!

சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் இராணுவ வாகனம் ஒன்றில் இந்திய வீரர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையோரம் பதுங்கி இருந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் வெடி குண்டு சதியில் சிக்கிய 42 இந்திய வீரர்கள் பலியானார்கள். இந்த சம்பவத்தால் நாடே அதிர்ச்சியில் உறைந்தது.
இந்த சம்பவம் குறித்து நடத்தப்பட்ட புலனாய்வின் அடிப்படையில் சம்பவத்துக்கு காரணமான பயங்கரவாதி அடில் அகமதுவை காஷ்மீருக்குள் அழைத்து வந்த மாக்ரே என்பவர் அண்மையில் கைதானார். இதே சம்பவத்தில் சென்ற வாரம் வெடிகுண்டுகளை மாருதி காரில் ஏற்றி சென்ற டிரைவர் ஷகீர் பஷீர் மார்ஷி என்பவனும் கைது செய்யப்பட்டான்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பயங்கரவாதி அடில் அகமதுக்கு பதுங்கி இருந்து தாக்குதல் நடத்த, புகலிடம், உணவு மற்றும் பல உதவிகள் செய்ததாக காஷ்மீரைச் சேர்ந்த 50 வயதான தாரிக் அகமது ஷா என்பவரும், 23 வயதான அவரது மகள் இன்ஷா ஜானும் கைதாகி உள்ளனர். ஜம்மு காஷ்மீர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்களிடம் புலனாய்வு அமைப்பினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.