கோவையின் கோலாகல பெருவிழா கோனியம்மன் தேர் திருவிழா . ஆச்சர்ய தகவலும் வரலாறும்
கோவையின் கோலாகல பெருவிழா கோனியம்மன் தேர் திருவிழா . ஆச்சர்ய தகவலும் வரலாறும்

கோனியம்மன் கோவில் இது கோவையின் முக்கிய அடையாளம். கோவையில் நடு நாயகமாக வீற்றிருக்கும் கோனியம்மன் அம்மனை சார்ந்தே இந்த கோவை நகரம் அமைக்கப்பட்டதாக வரலாறு சொல்கின்றன.
சிற்றரசு கோயன் வணங்கி வந்த கோயம்மாவே கோனியம்மன் என மறுவியதாக வரலாறு சொல்கின்றன. கோயமுத்தூர் என்ற பெயருக்கும் கோனியம்மன் தாயே அடிநாதமாக திகழ்கிறாள். 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோவில் இன்றளவும் கோவை மக்களின் காக்கும் ஸ்தலமாக திகழ்ந்து வருகிறது.
இத்திருத்தலத்தில் அம்மன் ஆதிபராசக்தி ரூபமான துர்கா பரமேஸ்வரி கோலத்தில் எழுந்தருளியுள்ளார். இக்கோவிலின் மற்றுமொரு தனிசிறப்பு அம்பாள் கருவறையின் பின்புறம் ஆதி கோனியம்மன் வீற்றிருப்பது. திருமணத்தடை, நன்மக்கட்பேறு, கொடு நோயிலிருந்து நிவாரணம், தொழில் விருத்தி ஆகிய மக்களின் அனைத்து பிரச்னைக்கும் தீர்வு கோனியம்மன்.
மேலும் இந்நகரில் பிறக்கும் பெரும்பாலான குழந்தைகள் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியவுடன் குடும்ப சடங்குகள் செய்து முடிக்கப்பட்டபின் இரண்டு அல்லது மூன்று மாதம் கழித்து முதன் முதலாக இந்த கோவிலுக்கே கொண்டு வரப்படுகின்றனர் . இங்கு பிறந்த குழந்தையை அம்மன் காலடியில் வைத்து தருவதும், அவர்களுக்கு பெயர் சூட்டுவிழா இத்திருத்தலத்தில் நடப்பது வழக்கமான ஒன்று.
மேலும் திருமணத்தின் மங்களகரமான சடங்குகளாக உப்பு ஜவுளி வாங்குதல், முதல் முறை பெண் பார்த்தால் போன்ற மங்களகராமான நிகழ்வுகள் யாவும் இங்கு நடப்பது கொங்கு மண்ணின் வழக்கம்.
அம்பாளுக்கு மாசி மாதத்தில் திருவிழா நடைபெற்று உலக பிரசித்தி பெற்ற திருத்தேர் ஊர்வலம் நடைபெறும். அந்நாளில் லட்சக்கணக்கான மக்கள் கோவை மாநகரில் திரண்டு அம்மனை தரிசிப்பது வழக்கம். கோனியம்மன் திருத்தேர் என்பது கோவையின் முக்கிய விழா. மக்கள் தங்கள் இல்லங்களில் திருவிழா நடப்பதாகவே கருதி அம்மனை காண வரும் பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர் என பல விதமான சேவைகளில் ஈடுபடுவது வழக்கம்.
கோவையே காத்திருக்கும் கோலாகல விழா இந்த ஆண்டு இன்று நிகழ்கிறது.