ஐ.பி.எல் போட்டியில் அதிரடியாக விளையாடி டி20 உலக கோப்பை அணியில் இடம் பெறுவேன் - குல்தீப் யாதவ்!
ஐ.பி.எல் போட்டியில் அதிரடியாக விளையாடி டி20 உலக கோப்பை அணியில் இடம் பெறுவேன் - குல்தீப் யாதவ்!

இந்தியா கிரிக்கெட் அணியின் சுழல்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ். இவர் சிறப்பாக பந்து வீசுவார். ஆனால் சமீப காலமாக இவர் அணியில் இடம் பெறவில்லை. உலக கோப்பை போட்டிக்கு பின்னர் ஜடேஜா சிறப்பாக விளையாடுவதால் தொடர்ந்து அணியில் இருந்து வருகிறார். சாஹல் சிறப்பான பந்து வீச்சை வெளி படுத்துவதால் அவரும் அணியில் இருந்து வருகிறார்.
இந்த தருணத்தில் ஐ.பி.எல் போட்டியில் கொல்கத்தா அணியில் சிறப்பாக விளையாடி டி20 உலக கோப்பை இந்தியா அணியில் இடம் பெறுவேன் என குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.
இதனை பற்றி குல்தீப் யாதவ் கூறுகையில் '' அனைத்து வீரர்களும் அதிகமான போட்டிகளில் விளையாட நினைப்பார்கள். ஏனென்றால் அதிகமான போட்டிகளில் விளையாடினால், முன்னேற்றம் அதிகமாக இருக்கும்.
ஐ.பி.எல் போட்டி ஒருமாதம் நடைபெறும் இதை பயன் படுத்தி சிறப்பாக செய்யப்பட்டு இந்தியா அணியில் மீண்டும் இடம் பெறுவேன் என்றார்.