Kathir News
Begin typing your search above and press return to search.

நாட்டிலேயே கொரோனா இல்லாத முதல் மாநிலம் - பாதிக்கப்பட்ட கடைசி நபருக்கும் நெகடிவ் : சாதனை படைத்த அரசாங்கம்!

நாட்டிலேயே கொரோனா இல்லாத முதல் மாநிலம் - பாதிக்கப்பட்ட கடைசி நபருக்கும் நெகடிவ் : சாதனை படைத்த அரசாங்கம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 April 2020 7:14 PM IST

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சில மாநிலங்கள் அதை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளன.

நாட்டிலேயே கொரோனா தொற்று இல்லாத மாநிலமாக கோவா அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த 7 பேருக்கும் கொரோனா இல்லை என்பது முடிவில் தெரிய வந்துள்ளது.

கோவா தொடக்கக் காலத்தில் இருந்தே அதிதீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் கடந்த 3-ந்தேதி வரை 7 பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டிருந்தனர். இன்று இறுதியாக கடைசி நபரையும் குணப்படுத்தியுள்ளது. இன்று அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா இல்லை என்று உறுதி செய்யப்பட்டது.

இதனால் ஏப்ரல் 3-ந்தேதிக்குப்பிறகு கோவாவில் புதிதாக கொரோனா தொற்று இல்லை. கடைசி நபருக்கும் இன்றும் நெகடிவ் வந்துள்ளது என கோவா முதல்வர் தெரிவித்துள்ளார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News