திரு முருகன் நியமனம் மூலம் தமிழக பா.ஜ.க. மாபெரும் சக்தியாக உருவெடுக்கும்: தமிழக பா.ஜ.க. தலைவர்கள் வாழ்த்து!
திரு முருகன் நியமனம் மூலம் தமிழக பா.ஜ.க. மாபெரும் சக்தியாக உருவெடுக்கும்: தமிழக பா.ஜ.க. தலைவர்கள் வாழ்த்து!

கடந்த 15 வருடங்களாக வழக்கறிஞராகவும், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை தலைவராகவும் இருந்து வரும் எல்.முருகன் தமிழக பா.ஜ.க. வின் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டு, அதற்கான அறிவிப்பினை பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா நேற்று மாலை வெளியிட்டார்.
நியமனம் குறித்து பா.ஜ.க. தேசீய செயலர் H. ராஜா கூறுகையில் "தமிழக பா.ஜ.க. வின் தலைவராக பொறுப்பேற்கும் சகோதரர் திரு.L.முருகன் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகிறேன்" என தனது டுவிட்டர் செய்தியில் வாழ்த்தியுள்ளார்.
நியமனம் குறித்து மாநில பொது செயலாளர் வானதி சீனிவாசன் கூறுகையில் " எல். முருகனுடன் அனைவரும் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம் என்றும், அவருக்கு தனது வாழ்த்துகள் என்றும், இதன் மூலம் தமிழ் நாட்டில் பா.ஜ.க. மாபெரும் சக்தியாக உருவெடுக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை" என தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க தலைவர் நியமனம் தமிழக பா.ஜ.க- பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கூறுகையில் ``பா.ஜ.க. முற்படுத்தப்பட்டோர் கட்சி, பிராமணர்களின் கட்சி என்று கட்டமைக்கப்பட்டிருக்கும் பிம்பம் உடைக்கப்பட்டிருக்கிறது என்றார். முருகனுக்கு தனது வாழ்த்துக்கள்" என்று கூறியுள்ளார்