நாம் எதிர்பார்க்காத அவசரநிலை. நமக்கு கற்றுத்தரும் பாடங்கள் என்ன?
நாம் எதிர்பார்க்காத அவசரநிலை. நமக்கு கற்றுத்தரும் பாடங்கள் என்ன?

உலகின் மக்கள் தொகையில் இரண்டாம் இடத்திலிருக்கிற இந்தியா இன்று பெரும் அவசர நிலையை எதிர்த்து போராடிக்கொண்டிருக்கிறது. திரும்பிய திசைகளிலெல்லாம் தனிமைப்படுத்துதல், அத்தியாவிசயம் தவிர மற்ற அனைத்தும் முடக்கம் என கண்டிராத காட்சிகள்.
நம் பழக்க வழக்கங்களை மறு சீரமைப்பு செய்ய நம் வாழ்க்கை முறையில் மாறுதலை புகுத்த இயற்கை தன் இரும்பு கரத்தால் நமக்கு பாடம் புகட்டியுள்ளது.
இந்த நிகழ்வுகளுக்கெல்லாம் நம் மனமும் உடலும் தயாராவதற்கு முன்பே எல்லாம் சட்டென நடந்திருக்கும் சூழலில். இந்த அவசர நிலை நமக்கு கற்று தந்த பாடங்கள் என்ன
ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்
உங்கள் ஆரோக்கியமே பிரதானமானது. அலுவலகம், வேலை பளு, இலக்கு, இலட்சியம் என அனைத்தையும் ஒரு மனிதனாக நாம் செய்ய வேண்டும் ஆனால் அனைத்திற்கும் நாம் ஆரோக்கியமானவராக இருக்க வேண்டும். காரணம் ஆரோக்கியம் என்பது நோயில்லாமல் இருப்பது மாத்திரம் அல்ல, ஒரு தனிமனிதரின் உடல், மனம் மற்றும் சமூக நலம் இந்த மூன்றும் ஒத்திசைவுடன் இருப்பதே சிறப்பான ஆரோக்கியம்
உறவுகளுக்கு மதிப்பளியுங்கள்
சமூகத்தில் இருந்து விலகியிருத்தல் என்பது நம்மை நம் குடும்பத்தினருடன் நெருங்கிய இருக்கிற செய்திருக்கிறது. வெறும் டிஜிட்டல் உலகத்தின் மூலம் நண்பர்களுடன் இத்தனை நாட்களும் பழையிருந்த நமக்கு குடும்ப உறுப்பினர்களின் மதிப்பினை இந்த அவசர நிலை உணர்த்தியிருக்கிறது.
சமூகத்தை நல்ல முறையில் பேணுங்கள்
நாம் சுற்றியிருக்கிற சமூகத்தை மாசுப்படுத்தாமல் இருக்கிற பொறுப்பு ஒவ்வொரு தனிமனிதருக்கும் உண்டு. நதிகளில் நெகிழியை எறிவது, தண்ணீரை, உணவை வீணாக்குவது மரங்களை செடிகளை இயற்கையை இத்தனை நாளும் நாம் திரும்பி பாராமல் இருந்தது என இத்தனைநாளும் நாம் காட்டிய அலட்சிய போக்கினை சீரமைக்க வேண்டிய பாடத்தை நாம் கற்று கொண்டுள்ளோம்.
இயற்கையின் முன் அனைவரும் சமம்
பதவி ஆட்சி பணம் என எதையெல்லாம் நாம் மேலாக நினைத்திருந்தோமோ அனைத்தையும் இந்த அவசர நிலை இல்லாமல் ஆக்கியிருக்கிறது. இயற்கையின் முன் அனைவரும் சமம் என்ற படிப்பினையை வழங்கியிருக்கிறது.
நல்லதே செய்யுங்கள்
அனைவருக்கும் பகிர்ந்தளியுங்கள். அன்பை, உதவியை எந்த எதிர்பார்ப்புமின்றி செய்யுங்கள்.
மிக முக்கியமாக இந்த தனிமையை உங்கள் தனிப்பட்ட ஆரோக்கியற்காக செலவிடுங்கள்