Kathir News
Begin typing your search above and press return to search.

விழாக்கோலம் பூணும் அயோத்தி : அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பூமி பூஜையில் பங்கேற்க முடிவு.!

விழாக்கோலம் பூணும் அயோத்தி : அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பூமி பூஜையில் பங்கேற்க முடிவு.!

விழாக்கோலம் பூணும் அயோத்தி : அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பூமி பூஜையில் பங்கேற்க முடிவு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  4 Aug 2020 2:10 AM GMT

ஒட்டுமொத்த இந்தியாவும் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடக்க உள்ள ராமர் கோவில் பூமி பூஜை நிகழ்வினை பெருத்த எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கி இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் அயோத்திக்கு செல்கிறார்கள் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் தற்போது கரோனா வைரஸ் தொற்று அதிகளவில் பரவி வருவதால் மூத்த தலைவர்கள் அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் நேரடியாக பூமிபூஜை நிகழ்வில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்றும் வீடியோ கான்பரன்சிங் முறையில் நிகழ்வை கண்டு களிப்பார்கள் என்று செய்தி வெளியாகியுள்ளது.

இவர்கள் இருவருமே ராமஜென்ம பூமி இயக்கத்திலும் ராமர் கோவில் கட்டப்படுவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளிலும் முக்கிய பங்கு வகித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உலக இந்துக்கள் அனைவரையும் பூமி பூஜை நிகழ்வை கோலாகலமாக கொண்டாடுமாறு பல மத தலைவர்களும் அரசியல் தலைவர்களும் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களே தனிப்பட்ட முறையில் சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்படுகிறதா என்று கவனித்து வருவதாக கூறப்படுகிறது.

அயோத்திக்கு தீவிரவாத அச்சுறுத்தல்கள் வந்துள்ள நிலையில் பிரதமர் மோடியின் வருகையையொட்டி பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அயோத்தி நகரின் எல்லைகளில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது. பூமி பூஜை அன்று பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் சகேத் கல்லூரியில் உள்ள ஹெலிபேடில் வந்து இறங்குவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கிருந்து நிகழ்ச்சி நடக்கும் ஹனுமான்கரி பகுதிக்கு அவர் செல்லும் வழி எங்கும் இருபுறமும் உள்ள வீடுகளில் மஞ்சள் வண்ணம் பூசப்பட்டு ராம கதையை உணர்த்தும் ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. மேலும் நிகழ்ச்சியை சிறப்பிக்கும் வண்ணம் நான்கு லட்டுகளை கொண்ட ஒரு லட்சம் லட்டு பாக்கெட்டுகள் மக்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளன.

வட அமெரிக்காவில் உள்ள இந்து மக்களும் இந்த நிகழ்வை சிறப்பிக்க பல்வேறு ஏற்பாடுகள் செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன அங்கு உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட உள்ளன மேலும் டைம்ஸ் சதுக்கத்தில் ஆகஸ்ட் 5 அன்று பகவான் ராமரின் படங்களும் பாடல்களும் வீடியோக்களும் ஜெய் ஸ்ரீ ராம் என்ற கோஷமும் LED கிளைகளில் ஒளிபரப்பப்பட்டு அங்கு வரும் மக்களுக்கு இனிப்புகளும் வினியோகிக்கப்பட உள்ளதாக அமெரிக்க வாழ் இந்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Next Story