Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழக அரசு அவசர சட்டம் - பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி மாற்றம்..?

தமிழக அரசு அவசர சட்டம் - பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி மாற்றம்..?

தமிழக அரசு அவசர சட்டம் - பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி மாற்றம்..?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  2 July 2020 9:05 AM GMT

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையமானது நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல்கள் நடத்தும் பொருட்டு, வாக்காளர் பட்டியல் தயாரித்தல், வாக்குச்சாவடிகள் அமைத்தல், குறிப்பேடுகளில் திருத்தம் செய்தல், மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தை கையாளுவதற்கு அலுவலர்களுக்கான பயிற்சி மற்றும் இது தொடர்பான மென்பொருள் தயார் செய்தல் போன்ற முன்னேற்பாடுகளைச் செய்து கொண்டுள்ளது.

இதற்கிடையில், திடீரென்று கொரோனா தொற்று நோய் பரவிவருவதால், மத்திய, மாநில அரசுகளால் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு எந்திரம் போர்க்கால அடிப்படையில் கொரோனா நோய் தடுப்பு பணிகள், பாதுகாப்பு பணிகள்,மீட்பு மற்றும் நலவாழ்வு பணிகள் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளது. எனவே தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் மாண்பமை உச்சநீதிமன்ற ஆணைகளுக்கிணங்க ஊரக உள்ளாட்சி தேர்தல்களை நடத்த இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே, பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் ஆகியவற்றின் தனி அலுவலர்களின் பதவிக்காலமானது 2020ம் ஆண்டு ஜூன் திங்கள் 30ம்தேதியன்று முடிவடைகிறது.

தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை 2020ம் ஆண்டு டிசம்பர் திங்கள் 31ம் தேதி வரை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பதற்காக, பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளின் தொடர்புடைய சட்டங்களை திருத்துவதென அரசானது முடிவு செய்துள்ளது. அதற்கிணங்கிய வகையில் முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் 2020ம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சி சட்டங்கள் (மூன்றாம் திருத்த) அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Next Story