வரும் 10 ஆம் தேதிக்கு பிறகு மத்திய அரசு ஊரடங்கை நீட்டிக்க அறிவிப்பு வெளியாக வாய்ப்பு அதிகம்..
வரும் 10 ஆம் தேதிக்கு பிறகு மத்திய அரசு ஊரடங்கை நீட்டிக்க அறிவிப்பு வெளியாக வாய்ப்பு அதிகம்..

பிரதமர் மோடி நேற்று முன்தினம் செய்தியாளர் சந்திப்பின் போது கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் நீண்டகால போர் அதில் மக்கள் சோர்வடையவோ, தோற்கடிக்கவோ முடியாது என்றோ கவலையடைய வேண்டாம் இதை எதிர்த்து நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம் என கூறி இருந்தார்
ஏப்ரல் 14க்கு பிறகு ம் ஊரடங்கை நீடிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு வலுவடைந்து நிலையில் பல்வேறு மாநில அரசுகள் மற்றும் வல்லுனர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசு பரிசீலனை செய்துவருகிறது
மத்திய அரசு ஊரடங்கை நீட்டிக்க தீவிர ஆலோசனை செய்து வருகிறது மேலும் அமெரிக்கா ஜப்பான் இத்தாலி பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ஊரடங்கை தீவிர படுத்த திட்ட மிட்டுள்ளனர்
கொரோனா நோய் தொற்று பரவிய மாவட்டங்களை மட்டும் முடக்கி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது வரும் 10 ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து விரிவாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்க படுகிறது