Kathir News
Begin typing your search above and press return to search.

மாஃபியா - மன்னிப்பு கேட்ட லைகா!

மாஃபியா - மன்னிப்பு கேட்ட லைகா!

மாஃபியா - மன்னிப்பு கேட்ட லைகா!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  4 April 2020 11:40 AM GMT

கடந்த பிப்ரவரி மாதம் அருண் விஜய் - பிரசன்னா நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியான படம் 'மாஃபியா'. இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இப்படம் அமேசான் பிரைமில் வெளியானது.

அதில் தான் வில்லங்கம் ஆரம்பமானது. இப்படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியில் டொரொண்டோ நகரில் சீரியல் கில்லர் ப்ரூஸ் மெக் ஆர்தர் என்பவனால் கொலை செய்யப்பட்ட கொலையாளிகள் படம் இடம்பெற்றிருந்திருக்கிறது. இதை கவனித்த கொலையாளிகளின் உறவினர்கள் கண்டனம் தெரிவிக்க, டொரோண்டா பகுதியில் இப்படத்தினை நீக்கி விட்டது அமேசான்.

இதை அறிந்து வருத்தம் தெரிவித்துள்ள லைகா நிறுவனம் சர்ச்சைக்குள்ளான அந்த காட்சியை நீக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளது.

Next Story